CARE Business School நடத்தும் தொழில் முனைவோருக்கான நான்கு நாள் பயிலரங்கம்:
அரசு வேலை, தனியார் துறைகளில் வேலை என்பது மாறி இன்றைக்கு தன்னை தொழில்முனைவோராக காட்டிக் கொள்வதிலேயே அதிக ஆர்வத்தோடு இருக்கின்றனர் இன்றைய கால இளைஞர்கள்.
ஒரு தொழில்முனைவோராக காட்டிக் கொள்வதற்கு இந்த சமூக வலைத்தளங்களும் மிக முக்கிய பங்காற்றுகின்றது .
எல்லோரிடம் புதிய புதிய திட்டங்கள் புதிய புதிய உத்வேகங்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன .
ஆனால் அவற்றை எல்லாம் எப்படி செயல்படுத்துவது ,எப்படி தன்னுடைய பாதையில் வெற்றி காண்பது என்பதுபற்றிய ஐயமே அதிகமாய் எழுகின்றது.
இந்த ஐயத்தினை போக்கும் பொருட்டு கேர் பிசினஸ் ஸ்கூல்(Care business school ) தொழில்முனைவோருக்கான 4 நாள் பயிலரங்கம் மார்ச் 22முதல் 25 வரை நடத்த உள்ளனர்.
மூன்று தொகுதிகளாக பிரிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியானது முதல் தொகுதியாக சிந்தனைகளை மேம்படுத்துதல், நுகர்வோர்களை புரிந்துகொள்ளும் கோணம், புதிய புதிய திட்டங்கள் உருவாக்குவதல், ஒரு தொழிலில் உள்ள தடைகள் ஆகியவற்றை விளக்கும் வகையில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
ஆனால் இந்நிகழ்ச்சி எதுவும் கருத்தரங்காக மட்டுமில்லாமல் அனைவரின் செயல்பாட்டுத் திறனை வளர்க்கும் வகையில் செயல்பாட்டு முறையாகவே அமையும் என்றும் கேர் பிசினஸ் ஸ்கூல் தலைவர் வெங்கடேஷ் அவர்கள் கூறியுள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU