எம்.ஜி.ஆர் சிலை திறப்பு விழா- எடப்பாடி பழனிசாமி நாளை திருச்சி வருகை

எம்.ஜி.ஆர் சிலை திறப்பு விழா- எடப்பாடி பழனிசாமி நாளை திருச்சி வருகை

திருச்சி திருவெறும்பூரில் இயங்கி வரும் பெல் தொழிற்சாலை வாசலில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் திருவுருவச்சிலை நாளை மாலை திறக்கப்பட இருக்கின்றது. 

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக எதிர்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நாளை திருச்சி வருகின்றார். பெல் நிறுவன வளாகத்தில், பெல் தொழிற்சாலை அனுமதியுடன் சுமார் 4 ஆயிரம் சதுர அடியில்

அ.தி.மு.க.,வின் நிறுவனரும், மறைந்த முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 12 அடி உயரமுள்ள முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டு, இதற்கான பணிகள் நடந்து வந்தன. 56 கிலோ எடையுள்ள ஏழு அடி உயரம் கொண்ட இந்த சிலை திறப்பு விழாவுக்காக கடந்த மாதம் 28-ம் தேதி காலை கால்கோள் நடப்பட்டது.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் முழு அளவிலான வெண்கல சிலையை திறப்பதற்காக, தமிழக எதிர்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நாளை (06.07.2023) காலை விமானம் மூலம் திருச்சி வருகின்றார். தனியார் விடுதியில் தங்கும் அவர், அ.தி.மு.க.,வின் முன்னணி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றார்.

அதனைத் தொடர்ந்து, மாலை 6 மணி அளவில் திருவெறும்பூர் பகுதியில் நிறுவப்பட்டிருக்கும் எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலையை திறந்து வைத்து பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றுகின்றார்.

திருச்சிக்கு நாளை வரும் முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு விமான நிலையத்தில் திரளான அ.தி.மு.க தொண்டர்கள் பெருத்த ஆரவாரத்துடன் வரவேற்பு கொடுக்க வேண்டும் என்றும் அ.தி.மு.க நிர்வாகிகளை முன்னாள் எம்.பி.ப.குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி திருச்சி வருகையை முன்னிட்டு பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளையும் திருச்சி மாநகர காவல்துறையினர் செய்து வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn