திருச்சியில் புத்தகத் திருவிழா - மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு

திருச்சியில் புத்தகத் திருவிழா - மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில், திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் புத்தகத் திருவிழா நவம்பர் 24 முதல் டிசம்பர் 04 வரை நடைபெற உள்ளது. 

இதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடன் முன்னேற்பாடு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், புத்தகக் கண்காட்சி நடைபெறவுள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில் புத்தக அரங்குகள், தினசரி நடைபெறும் கருத்தரங்குகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள், மேடை மற்றும் அரங்கம் அமைத்தல், உணவு அரங்கம் அமைத்தல், அறிவியல் மையம் மற்றும் பல்வகை கண்காட்சி கூடம் அமைத்தல் தொடர்பாகவும்,

 அரசுத்துறை திட்ட விளக்க அரங்குகள் அமைத்திடவும், வாகனங்கள் நிறுத்துமிடம், குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் உள்ளிட்ட மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும் முன்னதாக மாவட்டத்தின் மாநகராட்சி, அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி பகுதிகளில் புத்தக கண்காட்சி நடைபெற உள்ளதை சிறந்த முறையில் விளம்பரப்படுத்தும் வகையில் பணிகளை விரைவாக மேற்கொள்ளவும் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

 https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision