நகர விற்பனை குழுவின் உறுப்பினர்கள் தேர்தல் - மாநகராட்சி ஆணையர் தகவல்
நடைபாதை வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் நடைபாதை விற்பனை ஒழுங்குபடுத்துதல் சட்டம் 2014இல் பிரிவு 38 (1)ன் கீழ் பிறப்பிக்கப்பட்ட தமிழ்நாடு நடைபாதை வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு விற்பனையை ஒழுங்குபடுத்துதல் மற்றும்
உரிமம் வழங்குதல் திட்டம் 2015-ன் விதி கீழ் அமைக்கப்பட வேண்டிய நகர விற்பனை குழுவின்படி 6 எண்ணிக்கையிலான உறுப்பினர்களுக்கு கீழ்கண்ட விவரப்படி உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படும் விவரம்:
தாழ்த்தப்பட்டோர் - 1
மகளிர் வகுப்பினர் - 1
மாற்றுத் திறனாளிகள் வகுப்பினர் - 1 சிறுபான்மையினர் வகுப்பினர் - 1
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - 1
பிற வகுப்பினர் - 1
மொத்தம் – 6 எண்ணிக்கை.வைப்பு தொகை : ரூபாய் 2000/- திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட சாலையோர வியாபாரிகளின் நகர விற்பனை குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் விவரம் வேட்பு மனு பெறப்படும் தொடக்க நாள் (04.11.2024 - காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை.
வேட்பு மனு விண்ணப்பம் செய்யும் இறுதி நாள் 11.11.2024.
வேட்பு மனு பரிசீலனை செய்யும் நாள் 12.11.2024 காலை 11.00 மணி முதல் மாலை 3 மணி வரை).
வேட்பு மனு திரும்ப பெறும் நாள் 13.11.2024 மாலை 3 மணி வரை
வேட்பாளர் பட்டியல் வெளியிடும் நாள் 14.11.2024
தேர்தல் நடைபெறும் நாள் 22.11.2024
வாக்குப்பதிவு நடைபெறும் இடம் ஜமால் முகமது கல்லூரி டிவிஎஸ் டோல்கேட் திருச்சி
தேர்தல் நடைபெறும் நேரம் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை
வாக்கு எண்ணிக்கை நாள் (22.11.2024) மாலை 5.30 மணி முதல்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision