திருச்சியில் மக்களை தேடி மனுநீதி முகாமில் கவுன்சிலருக்கு பதில் கணவர் பங்கேற்பு - சர்ச்சை

திருச்சியில் மக்களை தேடி மனுநீதி முகாமில் கவுன்சிலருக்கு பதில் கணவர் பங்கேற்பு - சர்ச்சை

திருச்சி மாநகராட்சி தற்போது மக்களைத் தேடி மனுநீதி முகாம் ஒவ்வொரு மண்டலமாக நடத்தி வருகிறது. திருச்சியில் உள்ள 65 வார்டு மக்களின் குறைகளை தீர்ப்பதற்காக மாநகராட்சி மண்டலங்களில் மாநகராட்சி மேயர் அன்பழகன், துணை மேயர் திவ்யா,ஆணையர் வைத்திநாதன், அப்பகுதி கோட்டத் தலைவர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் முகாமில் கலந்து கொள்கின்றனர் . அவர்களிடம் பொதுமக்கள் நேரடியாக தங்களது வார்டு பிரச்சனைகளை மனுக்களாக அளிக்கலாம்.உடனடியாக அதற்கு தீர்வு காணப்படும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற மக்களைத் தேடி மனுநீதி முகாமில் 59வது வார்டு மாமன்ற உறுப்பினர் கீதா தனது குழந்தைக்கு உடல் நலம் இல்லாததால் அவரால் இம்முகாமில் பங்கேற்க முடியாமல் போனதாக கேட்ட போது தகவல் தெரியவந்தது. இந்நிலையில் கவுன்சிலர்  வராததால் அவரது கணவர்  இம்முகாமில் பங்கேற்றது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளாட்சி பிரதிநிதிகள் அதிக அளவு பெண்களுக்கு உள்ளாட்சி பதவிகளுக்கு அதிக இடங்களில் போட்டியிட வாய்ப்புகள் கொடுத்து வெற்றி பெற்று அவர்கள் தற்பொழுது உள்ளாட்சி பிரதிநிதிகளாக பணி ஆற்றி வருகின்றனர் .

ஆனால் அதிகமான இடங்களில் பெண் கவுன்சிலர்கள் வெற்றி பெற்ற வார்டுகளில் அவரது கணவர் ஆளுமை அதிகமாக  இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர் .தாங்கள் தேர்ந்தெடுத்த மாமன்ற  உறுப்பினரை சந்தித்து குறைகளை தெரிவிக்க முடியாமல் அவரது கணவரிடம் தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். தற்போது வெட்ட வெளிச்சமாக பொதுமக்கள் பங்கேற்கும் முகாமில் தனது மனைவிக்கு பதிலாக கவுன்சிலரின் கணவர் மேயர், துணை மேயர் மாமன்ற உறுப்பினர்கள் அமர்ந்து முகாமில் மனு வாங்கிய போது நிகழ்ச்சியில் பங்கேற்றது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே உள்ளாட்சி பிரதிநிதிகளின் கணவர் அலுவலக பணிகளில் மற்ற எதிலும் ஈடுபடக்கூடாது என்று தலைமைச் செயலாளர் உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே.இந்நிலையில் திருச்சி மாநகராட்சி மக்களைத் தேடி மனுநீதி நாள் முகாமில் கவுன்சிலர் பங்கேற்காத  முடியாத சூழ்நிலையில் கணவர் பங்கேற்று புகைப்படங்களில் நிற்பதும் மனு வாங்குவதும் ஆதாரத்துடன் வெளியாகி வைரலாகி வருகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய..... https://t.co/nepIqeLanO