ஆசிரியர்களின் புகைப்படத்தோடு கூடிய  பேனர் - பிஷப் ஹீபர் கல்லூரியில்  மகளிர் தின கொண்டாட்டம்

ஆசிரியர்களின் புகைப்படத்தோடு கூடிய  பேனர் - பிஷப் ஹீபர் கல்லூரியில்  மகளிர் தின கொண்டாட்டம்

உலக முழுவதும் இன்றைய தினம் மகளிர் தினம் வெகுசிறப்பாக பல்வேறு விதங்களில்   புதுப்புது வித்தியாசமான முயற்சிகளில் பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக கொண்டாடப்பட்டு வருகிறது .வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் போராடி கொண்டிருப்பவள் ஒரு பெண் .பெண் என்பவள் ஒரு போராளிதான் 
மகளிர் தினம் சுமார் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பல நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆனால் பலர் இதை ஒரு பெண்ணிய காரணம் என்று நினைக்கும் அதே வேளையில், அதன் வேர்கள் தொழிலாளர் இயக்கத்தில் தான் உள்ளன. இது முதன்முதலில் 1911 ஆம் ஆண்டில் ஜெர்மனியைச் சேர்ந்த கிளாரா ஜெட்கின் மார்க்சிஸ்டால் ஏற்பாடு செய்யப்பட்டது.  தொழிலாளர் இயக்கத்திலிருந்து வந்தது என்பதே வரலாறு.இப்படி ஒரு பெரும்  புரட்சிக்குப் பின்னால் பெண்ணின் வெற்றி உள்ளது எனும்போது சிறப்பாக இந்த நாளைக் கொண்டாட தான் தோன்றும் .


ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடங்களிலும் புதிய புதிய முயற்சிகளில் பெண்களை இன்று உற்சாகமூட்டும் விதமாகவும் அவர்களை கவுரவிக்கும் விதமாகவும் அவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாகவும் பல முயற்சிகளை செய்து அவர்களை இன்று மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துகிறார்கள் அதேபோன்று ஒரு புதுவித முயற்சியை திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் கல்லூரியும் அரங்கேற்றியுள்ளது கல்லூரியில் பணியாற்றும் அனைத்து பெண்  ஆசிரியர்கள் பேராசிரியர்கள், துறை பேராசிரியர்கள் அனைவரது  புகைப்படங்களையும் 36 அடி நீளமும் 8 அடி உயரமும் கொண்ட ஒரு பேனர்   வைத்து அவர்களை சிறப்பு செய்துள்ளது .


அவர்களது புகைப்படங்கள் அருகிலேயே அவர்களை கையெழுத்திட செய்து அவர்களை மேலும் ஊக்கப்படுத்தி, உற்சாகம் படுத்தியுள்ளது. கல்லூரியில் வரலாற்றுத் துறையை  சேர்ந்தவர்கள் இவ்விழாவில் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அதில் இன்று வெற்றியும் கண்டுள்ளனர். மேலும் ஒரு சிறப்பு யாதெனில் கல்லூரியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இன்று மதிய வேளையில் ஜும்பா பயிற்சி  சாதனா குழுவினர் சார்பாக  அளிக்கப்பட்டது.  இந்த பயிற்சியை மிக மகிழ்ச்சியோடு அங்கிருந்த அத்தனை ஆசிரியர்களும் செய்துவிட்டு இந்நாளை எங்களுக்கு மேலும் மறக்கமுடியாத நினைவாக மாற்றிவிட்டீர்கள் அதற்காக துறைக்கும் கல்லூரிக்கும் எங்களுடைய நன்றி எப்போதும் தெரிவித்துக்கொண்டே இருப்போம் என்று மகிழ்ச்சியோடு கூறியுள்ளனர் .

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I