பெற்றோரை திட்டியதால் மூதாட்டி கொலை - 63 சவரன் கொள்ளை சம்பவம் - 3 கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் கைது

பெற்றோரை திட்டியதால் மூதாட்டி கொலை - 63 சவரன் கொள்ளை சம்பவம் - 3 கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் கைது

திருச்சிராப்பள்ளி மாவட்டம், தொட்டியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தொட்டியம் மதுரா நகரைச் சேர்ந்த கருப்பண்ணன் மனைவி ராஜேஷ்வரி (65) என்பவர் கடந்த 17.05.2023-ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார். 

அப்போது இறந்துபோனவரின் மகனான மணிகண்டன் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொலையின் போது குற்றவாளிகள் வீட்டிலிருந்து 63 சவரன் நகைகள் மற்றும் ரூ.10 இலட்சம் பணத்தை திருடி சென்றதாக தொட்டியம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்யப்பட்டது.

இராம்ஜிநகர் பகுதியில் சந்தேகப்படும்படியான நபர்கள் காரில் வந்து நகைகளை அடகு வைப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் தனிப்படை இராம்ஜி நகர் காவல் ஆய்வாளர் வீரமணி, முதல் நிலை காவலர் விஜயராகவன் மற்றும் தொட்டியம் காவல் ஆய்வாளர் முத்தையன், ஆகியோர் இராம்ஜிநகர் பகுதியில் தீவிர விசாரணை செய்தனர். 

சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்கள் மற்றும் சந்தேக நபர்களின் செல்போன் எண்களை ஆய்வு செய்ததில் இன்று தொட்டியம் பகுதியைச் சேர்ந்த 1) கிருஷ்ணன் (20), த/பெ. சந்திரசேகர் (கல்லூரி மாணவர்) வள்ளுவர் தெரு, காந்திநகர் காலனி தொட்டியம், 2) மோகன்ராஜ் (18), த/பெ. ராஜராஜன் (கல்லூரி மாணவர்), 4/214 அரிசனதெரு, அலகரைமேற்கு, தொட்டியம் (TK), திருச்சி, 3) விக்ரம் (20), த/பெ. ராஜாராம், 6/12 தெற்குதெரு, சித்தூர், தொட்டியம், திருச்சி, 4) ஆறுமுகம் (20), த/பெ. விஸ்வநாதன் (கல்லூரி மாணவர்), நடுத்தெரு, மணமேடு, தொட்டியம், ஆகியோர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

மேற்படி இறந்துபோன ராஜேஷ்வரி என்பவரை கொலை செய்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்ததாக ஒப்புக்கொண்டனர். இறந்து போன ராஜேஸ்வரி என்பவர் இவ்வழக்கின் எதிரி கிருஷ்ணன் என்பவரின் அண்ணன் விஜயகுமார் மற்றும் அம்மா ஆனந்தி ஆகியோரை சில நாட்களுக்கு முன்பு திட்டியதால், அதை மனதில் வைத்துக்கொண்டு முன்கூட்டியே திட்டமிட்டு இறந்துபோன ராஜேஷ்வரியை கிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர்கள் கொலை செய்தது தெரியவருகிறது.

மேலும் அவர்களிடமிருந்து இதுவரை சுமார் 38 சவரன் நகைகள், 80 கிராம் வெள்ளி பொருட்கள், 1-ஐபோன், ரூ.48000/- பணம், இவ்வழக்கில் திருடிய பணத்தை வைத்து வாங்கிய சுமார் 4 / லட்சம் மதிப்புள்ள TN 31 AU 2244 என்ற பதிவெண்ணுள்ள Scorpio Car-1 ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது. மேற்கொண்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision