அரசு எச்சரிக்கை... பாஸ்போர்ட் எடுப்பதால் பணம் பறிபோக வாய்ப்பு!!
பாஸ்போர்ட் பெறுபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது மிக முக்கியமான தகவல் இது. இல்லையெனில் நீங்கள் பண இழப்பை சந்திக்க நேரிடும், மேலும் பல்வேறு சிரமங்களில் சிக்கிக் கொள்ளலாம் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. நீங்கள் பாஸ்போர்ட் பெற விரும்பினால், மத்திய அரசின் இந்த எச்சரிக்கையை தெரிந்து கொள்ள வேண்டும், இல்லையெனில் நீங்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம். பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளை தேடுபவர்கள் போலி இணையதளங்கள் அல்லது மொபைல் அப்ளிகேஷன்களுக்கு இரையாக வேண்டாம் என மத்திய அரசு கடந்த திங்கட்கிழமை எச்சரித்துள்ளது. செய்தி கொஞ்சம் லேட்தான் இருந்தாலும் லேட்டஸ்டா கொடுப்போமே, பல போலி இணையதளங்கள் மற்றும் மொபைல் ஆப்கள் விண்ணப்பதாரர்களிடம் இருந்து தரவுகளை சேகரித்து பெரும் கட்டணம் வசூலிப்பது அதிகாரிகளின் கவனத்திற்கு வந்துள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
போலி இணையதளங்கள், பாஸ்போர்ட் சேவை வழங்கும் ஆப்ஸ் ஆகியவற்றால் ஏமாற வேண்டாம் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. "பல போலி இணையதளங்கள் மற்றும் மொபைல் அப்ளிகேஷன்கள் விண்ணப்பதாரர்களிடமிருந்து தரவுகளை சேகரித்து, ஆன்லைன் விண்ணப்ப படிவங்களை நிரப்புவதற்கும், பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளுக்கான சந்திப்புக்களை நடத்தி கூடுதல் கட்டணம் வசூலிப்பது அமைச்சகத்தின் கவனத்திற்கு வந்துள்ளது" என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த போலி வலைத்தளங்களில் சில org டொமைன் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளன, சில IN உடன் பதிவு செய்யப்பட்டுள்ளன மற்றும் சில டாட் காமில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதையும் கூறியுள்ளன.
இந்த போலி இணையதளங்களின் பெயர்களையும் பட்டியலிட்டுள்ளது அவற்றை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா ?
மற்றும் வேறு சில போலி இணையதளங்களும் உள்ளன எனக்குறிப்பிட்டு இருக்கிறது. எனவே, இந்திய பாஸ்போர்ட் மற்றும் தொடர்புடைய சேவைகளுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து குடிமக்களும் மோசடியான இணையதளங்களைப் பார்வையிடவோ அல்லது பாஸ்போர்ட் சேவைகள் தொடர்பாக பணம் செலுத்தவோ வேண்டாம் என்றும், இல்லையெனில் அவர்கள் நிதி இழப்பை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய அரசின் பாஸ்போர்ட் சேவைகளுக்கு ஒரே ஒரு அதிகாரப்பூர்வ இணையதளம் மட்டுமே உள்ளது என்பதை நீங்கள் தெளிவாக அறிக பாஸ்போர்ட் சேவைகளுக்கான இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.passportindia.gov.in ஆகும்,
அதன் இணைப்பு நமது வாசர்களுக்காக தரப்பட்டுள்ளது, www.passportindia.gov.in எமக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை என தனியாக இனி விளம்பரப்படுத்த வேண்டும் போல ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் பார்த்து நாமதான் சூதனமா நடந்துக்கணும் வேறு என்னத்த சொல்ல.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision