திருச்சியில் மாபெரும் மரக்கன்றுகள் நடும் விழா

திருச்சியில் மாபெரும் மரக்கன்றுகள் நடும் விழா

பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் முதலாம் ஆண்டு விழாவினை முன்னிட்டு நாளந்தா வேளாண்மை கல்லூரி M.R.பாளையம் வளாகத்தில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் M. பிரதீப் குமார் தலைமையில், திருச்சி தலைமை வனப்பாதுகாவலர் N.சதீஷ் அறிவுரையின்படி, மாவட்ட வன அலுவலர் G.கிரண் ஆலோசனைபடியும்,

R.சரவணகுமார் உதவி வனப்பாதுகாவலர் முன்னிலையில், லால்குடி வருவாய் கோட்டாட்சியர் சுப்பிரமணி மாபெரும் மரக்கன்றுகள் நடும் விழாவினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியை முன்னிட்டு திருச்சி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் வனத்துறை சார்பில் 2500 மரக்கன்றுகள் நடப்பட்டு பசுமை தமிழ்நாடு இயக்க வலைதளத்தில் புகைப்பட ஆவணங்களுடன் பதிவு செய்யப்பட்டது.

மேலும் இவ்வாண்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வனத்துறை சார்பாக விவசாயிகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு பசுமை தமிழ்நாடு இயக்கத்தின்(GTM) மூலமாக 1230000 மரக்கன்றுகளும், காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு பல்லுயிர் பரவல் மற்றும் பசுமையாக்கல் திட்டத்தின்(TBGPCCR) மூலம் 242000 மரக்கன்றுகளும் உற்பத்தி செய்து நடவு செய்யப்பட்டு வருகிறது.

வரும் காலங்களில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை பசுமை போர்வையாக மாற்றிட பொதுமக்கள், தொண்டு நிறுவனத்தினர் மற்றும் கல்வி நிறுவனத்தினர் மூலமாக மரக்கன்றுகள் நடவு செய்யவும், நெகிழி பயன்பாட்டை தவிர்த்து "மீண்டும் மஞ்சப்பை" உபயோகிப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் வனச்சரக அலுவலர்கள் ரவி. கிருஷ்ணன். மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் அருள்ஜோதி, கிராம நிர்வாக அலுவலர், வாழையூர் ஊராட்சி மன்ற தலைவர், வாய்ஸ் அறக்கட்டளை உறுப்பினர்கள். நாளந்தா வேளாண்மை கல்லூரி முதல்வர் மற்றும் மாணவ மாணவியர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision