திருச்சியில் 929 பேர் அரசு தேர்வு எழுதவுள்ளனர் - மாவட்ட ஆட்சியர் தகவல்

திருச்சியில் 929 பேர் அரசு தேர்வு எழுதவுள்ளனர் - மாவட்ட ஆட்சியர் தகவல்

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission) மூலமாக நடைபெறவுள் National Defence Academy and Naval Academy and Combined Defence Services Examination (I), 2023 ஆகிய தேர்வுகள் (16.04.2023) அன்று காலை 9:00 மணி முதல் மாலை 5.00 மணி வரை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடைபெறவுள்ளது.

மேற்படி தேர்வு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மூன்று தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. இத்தேர்வினை மொத்தம் 929 தேர்வர்கள் எழுதவுள்ளனர். மேலும், 3 தேர்வுக்கூட மேற்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்னர். இப்போட்டித் தேர்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியினை மேற்கொள்ள ஒரு இயங்கு குழு (Mobile Unit) அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் துணை ஆட்சியர் நிலையில் ஒரு அலுவலர், துணை வட்டாட்சியர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், ஆயுதம் ஏந்திய காவலர் ஒருவர் ஆகியோர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வு மையத்தை ஆய்வு செய்யும் பொருட்டு வட்டாட்சியர் நிலையில் (Inspection Officer) இரண்டு ஆய்வு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

தேர்வு மையத்தில் காவல்துறை மூலம் பாதுகாப்பு பணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் வழங்கப்பட்டுள்ள கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தேர்வு மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

மேலும் தேர்வு மையத்தில கண்காணிப்பு செய்திட, 3 ஆண் காவலர்கள், மற்றும் 2 பெண் காவலர்கள் என மொத்தம் 5 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு அறைகளில் தேர்வு எழுதும் ஒவ்வொரு 24 தேர்வர்களுக்கும் இரண்டு அறை கண்காணிப்பாளர்கள் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர். 

தேர்வு எழுத வரும் தேர்வாளர்கள் செல்லிடை பேசி உள்ளிட்ட எவ்வித மின்னணு சாதனங்களும் தேர்வு மையங்களுக்கு எடுத்து வர அனுமதி இல்லை என தேர்வாணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.