மணப்பாறை நகராட்சி நியமனக்குழு உறுப்பினர் தேர்தல் ஒத்திவைப்பு
திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சியில், நகர மன்ற கூட்ட அரங்கில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர், ஒப்பந்த குழு உறுப்பினர் மற்றும் நியமன குழு உறுப்பினர்களுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் நகர்மன்ற தலைவர் உள்ளிட்ட 10 அதிமுக உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
27 உறுப்பினர்களில் தேர்தலை 16 திமுக உறுப்பினர்கள் புறக்கணித்த நிலையில், ஒரு அதிமுக உறுப்பினரும் கூட்ட அரங்கிற்கு வரவில்லை. அதனைத்தொடர்ந்து போதிய கோரம் இல்லாததால் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாகவும், மறுதேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் நகராட்சி ஆணையர் எஸ்.என்.சியாமளா அறிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO