விஜயதசமி பண்டிகை - குழந்தைகளுக்கு வித்யாரம்பம் தொடங்கி, சரஸ்வதிதேவியை வழிபட்ட மக்கள்.

விஜயதசமி பண்டிகை - குழந்தைகளுக்கு வித்யாரம்பம் தொடங்கி, சரஸ்வதிதேவியை வழிபட்ட மக்கள்.

நவராத்திரி பண்டிகையின் முக்கிய அம்சமாக சக்திதேவியை 9நாட்களும் வெவ்வேறு ரூபங்களில் வழிபாடு செய்து, அதன் பின்னர் மகிஷாசுரனை தேவி 9 நாட்கள் போரிட்டு வெற்றிவாகை சூடிய நாளே விஜயதசமியாகக் கொண்டாடப்படுகிறது. அன்றையதினம் புதிதாக தொழில் தொடங்குவோர், கல்வி பயில ஆரம்பிப்போர் தங்கள் பணிகளை ஆரம்பித்தல் நன்று என்பது ஐதீகம்.

கல்வி, கலைகள் என இந்நாளில் எது தொடங்கினாலும் ஜெயமாக முடியும் என்பதால், விஜயதசமியான இன்று மும்மூர்த்திகள் ஸ்தலமாக விளங்கும் திருச்சி உத்தமர் கோவிலில் சரஸ்வதிதேவி சன்னதியில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் எனப்படும் கல்வி பயில வழிபாடுகள் நடைபெற்றது.

இங்கு நடைபெற்ற வித்யாரம்பம் வழிபாட்டில் ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நெல் மணிகளில் அ- என்ற எழுத்தை எழுதியும், அதனைத் தொடர்ந்து உயிர் எழுத்துக்கள் மற்றும் ஏ பி சி டி ஆங்கில எழுத்துக்கள், 1 முதல் 10 வரையிலான எண்களையும் நெல்லிலும், சிலேட்டிலும் எழுதி குழந்தைகளுக்கு கல்வியைத் தொடங்கினர். இதனையொட்டி ஏராளமான பெற்றோர்கள் குழந்தைகளின் கைப்பிடித்து பரப்பி வைத்திருக்கும் நெல்லில் வித்யாரம்பம் எனப்படும் 'அ, ஆ' எழுத கற்றுக்கொடுத்தனர்.

பின்னர் சரஸ்வதி தேவி சன்னதியில் வழிபாடு செய்ததனர். மேலும் இங்கு உள்ள சரஸ்வதி கையில் ஓலைச் சுவடிகளைக் கொண்டு அருள் பாலிப்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து தங்களது குழந்தைகளுக்கு வித்யாரம்பம் கற்றுக்கொடுத்து வழிபாடு செய்தனர். பள்ளிகளில் இன்று விஜயதசமியையொட்டி மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision