5 கிலோ குட்கா கடத்தி வந்த நபர் கைது - நான்கு சக்கர வாகனம் பறிமுதல்

5 கிலோ குட்கா கடத்தி வந்த நபர் கைது - நான்கு சக்கர வாகனம் பறிமுதல்

திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, அறிவுரையின்ப்படி திருச்சி மாநகரில் குட்கா, ஹான்ஸ், கூல்லிப், விமல், பான் மசாலா போன்ற இளைஞர்களின் எதிர்காலத்தை கெடுக்கும் புகையிலை மற்றும் போதை பொருட்களை விற்பனை மற்றும் கடத்தல் செய்வோர் மீது காவல் துணை ஆணையர், உதவி ஆணையர் மற்றும் காவல் ஆய்வாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

திருச்சி கோட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கலைஞர் அறிவாலயம் அருகில் உள்ள ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி டீ கடை முன்பு வாகன தணிக்கை செய்தபோது சந்தேகம்படும்படியாக TN 45 CB 0527 என்ற நான்கு சக்கர வாகனத்தில் வந்த ராம்ஜிநகரை சேர்ந்த ராஜேந்திரன் (44), த.பெ.மூக்கன் என்பவரால் கடத்தி வரப்பட்ட தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ்- 2.700 கிலோ கிராம், கூல்லிப்-1 கிலோ, விமல் பான் மசாலா-1.250 கிலோ கிராம் மற்றும் RMD பான்மசாலா-120 கிராம் என சுமார் ரூ.5,700/- மதிப்புள்ள, சுமார் 5 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தும், எதிரி மீது வழக்குப்பதிவு செய்தும், கடத்தலுக்கு பயன்படுத்திய TN 45 CB 0527 என்ற நான்கு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தும், எதிரியை கைது செய்தும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

மேலும் திருச்சி மாநகரத்தில், இளைஞர்களின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் போதை பொருட்களான கஞ்சா, குட்கா புகையிலை பொருள்களை விற்பனை செய்யும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

 https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision