பறக்கும் படையினரால் 3,96,500 ரூபாய் பறிமுதல்

பறக்கும் படையினரால் 3,96,500 ரூபாய் பறிமுதல்

திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா துவரங்குறிச்சி ஆத்துபட்டி அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தனியார் சிட்பன்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் வடக்கு இடையபட்டியைச் சேர்ந்த கருப்பையா மகன் பார்த்தசாரதி (24) என்பவர் இருசக்கர வாகனத்தில் வைத்து உரிய ஆவணங்கள் இன்றி சுமார் 3 லட்சத்து 45 ஆயிரம் எடுத்துச் சென்ற நிலையில் தேர்தல் பறக்கும் தேர்தல் அதிகாரி குணசேகரன் மற்றும் காவலர் சிறப்பு உதவி ஆய்வாளர் சரோஜா தலைமையிலான பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

இதே போன்று மணப்பாறை அடுத்த பன்னாங்கொம்பு அருகில் கன்னி வடுகப்பட்டியைச் சேர்ந்த கருணாநிதி மகன் பாலசுப்பிரமணியன் (22). இவர் தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்த நிலையில், இருசக்கர வாகனத்தில் 51 ஆயிரத்து 950 ரூபாய் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் தலைமையிலான பறக்கும் படையினர் காவலர் சிறப்பு உதவி ஆய்வாளர் பழனிவேல் ஆகியோர் பறிமுதல் செய்யப்பட்டு மணப்பாறை வட்டாட்சியர் தனலட்சுமியிடம் ஒப்படைத்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision