வெயில் காலத்தில் நாய்களை எப்படி பராமரிக்கணும்? டாக்டர்.எஸ்.கணேஷ்குமார் விளக்கம்

வெயில் காலத்தில் நாய்களை எப்படி பராமரிக்கணும்? டாக்டர்.எஸ்.கணேஷ்குமார் விளக்கம்

வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளுக்கு அதன் மீதான அக்கறை அதிகமாக இருக்கும். அந்த வகையில் கோடை மற்றும் குளிர் காலங்களில் அவற்றை பராமரிப்பதில் தனி அக்கறை காட்ட வேண்டும். இந்த நிலையில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளுக்கு ஏற்படும் உடல் மாற்றங்கள், அவற்றை எவ்வாறு சரி செய்யலாம், முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன? என்பது குறித்து கால்நடை மருத்துவர் எஸ். கணேஷ்குமார் விளக்கம் அளித்துள்ளார். அதில், வெயிலின் தாக்கத்தால் செல்லப்பிராணிகளுக்கு 'ஹீட் ஸ்ட்ரோக்' வரும். அதோட உடல் வெப்பநிலை 43 டிகிரி செல்சியஸ்க்கு அதிகமாக இருந்தால் இளைப்பு வாங்குதல், மூச்சுவிட திணறுதல். நுரையாக சலைவா வெளியேற்றுவது போன்ற அறிகுறிகளால், ஹிட் ஸ்ட்ரோக் இருப்பதை அறியலாம்.

வாயின் உட்பகுதியில் உள்ள ஈறுகளில், அடர் சிவப்பு, பர்ப்பிள், ப்ளு, கிரே நிறங்களில் தோல் மாறி இருத்தல், மூக்கில் இருந்து ரத்தம் வடிதல் போன்ற அறிகுறிகள் மூலம், அதிகப்படியான வெப்பத்தால், நாய்கள் பாதிக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்யலாம். அப்போது மருத்துவரிடம் அழைத்து செல்வது அவசியம். நிழலான இடங்களில் தங்க வைப்பதோடு, அதிகாலை, மாலை வெயிலுக்கு பின், நடைப்பயிற்சிக்கு அழைத்து செல்லுதல், மதிய வேளைகளில் உணவை தவிர்த்து, அதிக தண்ணீர் கொடுப்பது.

விதையில்லாத தர்பூசணி, ஆரஞ்ச், வெள்ளரிக்காய், வாழைப்பழம் தருவதால், உடல் வெப்பநிலையை சமப்படுத்தலாம். பொதுவாக வெயில் காலங்களில். காரில் செல்லப்பிராணிகளை வெளியிடங்களுக்கு அழைத்து செல்லும் போது கடைகளுக்கு செல்வதாக இருந்தால், உடன் அழைத்து செல்ல வேண்டும். காருக்குள்ளே நீண்ட நேரம் அவை இருந்தால், காரின் உள் வெப்பநிலை 100 டிகிரிக்கும் மேல்  அதிகரிப்பதால் செல்லப்பிராணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision