கொண்டாடுவோம் வரகு பொங்கல் -ஆரோக்கியம் தரும் வரகரிசி

கொண்டாடுவோம் வரகு பொங்கல் -ஆரோக்கியம் தரும் வரகரிசி

உலகில் இருக்கும் எந்த ஒரு உயிரினமும் சாப்பிடாமல் உயிர்வாழ முடியாது. மனிதர்களும் தாங்கள் உயிர் வாழ பல வகையான உணவுகளை உண்கின்றனர். அதில் பிரதான உணவாக அரிசி இருக்கிறது. இந்த அரிசியில் பல வகைகள் உண்டு. அதில் ஒன்று தான் வரகு அரிசி எனப்படும் வரகரிசி. அரிசி, கோதுமையைக் காட்டிலும் வரகில் நார்ச்சத்து மிகவும் அதிகம். மாவுச்சத்தும் குறைந்து இருப்பதால், உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. இது ஆங்கிலத்தில் ‘Kodo Millet’ என்று அழைக்கபடுகிறது.

நம்மாழ்வார் இயற்கை சிறுதானிய உழவர் உற்பத்தியாளர்குழு பெரம்பலூர் மாவட்டம் நன்னை கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் இயற்கை முறையில் சிறு தானிய வகையான வரகை நம்மாழ்வார் கூறிய இயற்கை விவசாய வழியில் விவசாயம் செய்து நேரடியாக அவர்களே விற்பனை செய்து வருகின்றனர். வரகு பொங்கல் என்ற பெயரில் அனைத்து மக்களுக்கும் இயற்கை முறையில் விளைவித்த வரகு கொண்டு சேர்க்கும் விதமாக நம்மாழ்வார் இயற்கை சிறுதானிய உணவு உற்பத்தி குழுவினர் விவசாயிகளிடமிருந்து நேரடியாக பெற்ற வரகு அரிசியை விற்பனை செய்ய உள்ளனர்.

வரகரிசி கிலோ 90 ரூபாய் வரகு குருணை ஒரு கிலோ ரூபாய் 50 என்றும் நெகிழி இல்லா பேக்கிங் முறையில் விற்பனை செய்து வருகின்றனர். இதற்கான ஆர்டர் செய்ய கடைசி நாள் ஜனவரி 6ஆம் தேதி. நம்மாழ்வார் வழியில் இயற்கை விவசாயம் மூலம் ஆறு ஆண்டுகளாக சிறு தானிய வகையான வரகரிசி விளைவித்து நம்மாழ்வார் சிறுதானிய உற்பத்தி குழுவினர் மூலம் இயங்கும் மில்லில் அரைத்து வரகு அரிசி, வரகு குருணை என பிரித்து விற்பனை செய்து வருகின்றோம். 

நம்மாழ்வார் விரும்பியது போல அனைத்து மக்களுக்கும் இயற்கை விவசாயத்தால் விளைந்த ஆரோக்கியமான உணவினை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே இதன் நோக்கம் என்கிறார் நம்மாழ்வார் இயற்கை சிறுதானிய உணவு உற்பத்தி குழுஉறுப்பினர் பெரியசாமி.

சிறுதானிய உணவு வகைகளை நம்ம முன்னோர்கள் தொடர்ந்து தினமும் உணவில் சேர்த்துக் கொண்டார்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் ஆனால் இன்றைக்கு  சிறு தானிய வகைகளை பயன்படுத்துவதையே மறந்து விட்டோம் அதனை மீட்டெடுக்கும் முயற்சியாக இதனை தொடர்ந்து செய்து வருகிறோம் என்கிறார் குழுவின் உறுப்பினர் சுமதி.

ஆடர் புக்கிங் செய்ய : https://forms.gle/NDTr8oS6k8AzAHWW7

தொடர்புக்கு : 9901965430

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/LFNwwZ6K29zAPpD8WoDIQc

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn