ஒமிக்கிரானை எதிர்க்கொள்ள திருச்சி அரசு மருத்துவமனை தயார்

ஒமிக்கிரானை எதிர்க்கொள்ள திருச்சி அரசு மருத்துவமனை தயார்

கொரோனா வைரஸ் மூன்றாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் தமிழகத்தில் நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதற்கிடையில் உருமாறிய தொற்றாக ஒமிக்கிரான் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

குறிப்பாக பொது மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும், கட்டாயம் கோவிட் தடுப்பு ஊசி செலுத்தி இருக்க வேண்டும் என தமிழக அரசு எச்சரித்து வருகிறது.

இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவனையில் ஒமிக்ரான் சிறப்பு வார்டு தயாராக உள்ளது. அனைத்து மருத்துவ வசதிகளுடன் 42 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டை மருத்துவமனை முதல்வர் வனிதா உள்ளிட்ட மருத்துவர்கள் ஆய்வு செய்தனர். மேலும் ஒமிக்கிரான் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் அளிக்க தயார் நிலையில் மருத்துவ வசதிகளும், மருத்துவர்களும் தயார் நிலையில் உள்ளதாக திருச்சி அரசு மருத்துவமனை டீன் வனிதா தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/LFNwwZ6K29zAPpD8WoDIQc

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn