பசுமாட்டை திருடிய நபரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

பசுமாட்டை திருடிய நபரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் எல்லக்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகரன் (45). இவர் ஆடு, மாடு வளர்ப்பு வருவதாகவும் இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் மாடுகளை தோட்டத்தில் கட்டி போட்டு புல் மேய விட்டு வந்ததாகவும், இந்த நிலையில் மாலை சென்று பார்த்த பொழுது அதில் இருந்த ஒரு பசு மாடு மட்டும் காணவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த சந்திரசேகரன் தனது மாட்டை தேடி பல இடங்களில் தேடி அழைந்துள்ளார். அப்பொழுது புதுக்கோட்டை ஆலங்குடி தெற்குகல்லு பள்ளம் பகுதியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் சக்திவேல் (19) என்பவர் மாட்டை திருடி புதுக்கோட்டைக்கு விற்க சென்று கொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் சந்திரசேகரன் கணேஷ் நகர் ஒன்பதாவது தெரு பகுதியில் மாட்டை திருடி வைத்திருந்த சக்திவேலிடம் இருந்து சந்திரசேகரன் தனது மாட்டை மீட்டதோடு சக்தி வேலையும் பிடித்து திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேலை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision