திருச்சியில் 14 கோயில்களுக்கு சுகாதாரமான பிரசாதம் வழங்கும் இடத்துக்கான சான்றிதழ்
திருச்சி மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பிரதான கோயில்களுக்கு சுகாதாரமான மற்றும் பாதுகாப்பான பிரசாதம் வழங்கும் இடங்களுக்கான சான்றிதழ் வழங்க ஆய்வுகள் நடத்தப்பட்டன. இந்த ஆய்வின் அடிப்படையில், அளிக்கப்பட்ட முன்னேற்ற அறிவிப்புகளை நிவர்த்தி செய்ததைத் தொடர்ந்து வயலூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், உத்தமர் கோயில், நீலிவனேஸ்வரர் திருக்கோயில், புண்டரீகாட்சப்பெருமாள் கோயில், ஆதி மாரியம்மன் கோயில், அன்பில் மாரியம்மன் கோயில், பிரசன்ன வெங்கடாசலபதி கோயில், காசி விஸ்வநாத சுவாமி கோயில், பூலோகநாதர் சுவாமி கோவில், கமலவல்லி நாச்சியார் கோயில், ஆஞ்சநேய சுவாமி கோவில், பிரம்மபுரீஸ்வரர் கோயில், உஜ்ஜியினி ஓங்காளியம்மன் கோயில், உக்கிரமாகாளியம்மன் கோயில், ஆகிய கோயில்களுக்கு சுகாதாரமான பிரசாதம் வழங்கும் இடத்துக்கான (BHOG) சான்றிதழ்களையும்,
மீனாட்சி விடியல் கல்லூரி அரசு பொறியியல் கல்லூரி ஸ்ரீரங்கம் திருவரம்பூர் அரசு தொழிற்பயிற்சி கூடம் அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக்கல்லூரி அங்கன்வாடி மையம் ஊத்துக்குளிஆகிய நான்கு கல்லூரிகளுக்கு Eat Right Campus (சரியான உணவு உண்ணும் வளாகம்) சான்றிதழ்களையும்,
சுமார் 119 மணப்பாறை, துறையூர் மற்றும் காந்தி மார்க்கெட் உணவு வணிகர்களுக்கு FOSTAC (Food Safety Training and Certification) பயிற்சி அளிக்கப்பட்ட பயிற்சி சான்றிதழ்களையும், ஆக மொத்தம் 138 சான்றிதழ்களையும் திருச்சிராப்பள்ளி மாவட்ட நியமன அலுவலர், உணவு பாதுகாப்பு துறை டாக்டர்.R.ரமேஷ்பாபு, முன்னிலையில் நேற்று (30.03.2022) புதன் கிழமை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு, வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட அறநிலையதுறையின் இணை ஆணையர் ஆச.செல்வராஜ், இணை ஆணையர் மோகனசுந்தரம், அரசு பொறியியல் கல்லூரி ஸ்ரீரங்கம் முதல்வர் DR.V.M.சாந்தி, மருங்காபூரி ஸ்ரீ மீனாட்சி விடியல் காலேஜ் அமுதன், அரசு தொழிற்பயிற்சி கூடம் திருவெறும்பூர் G.பூமிநாதன், அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி DR.M.பாஸ்கர், மணப்பாறை மளிகை கடை சங்க தலைவர் ரவி மற்றும் செயலாளர் பாக்கியம், மணப்பாறை கோழிக்கடை சங்க தவைலர் அப்துல்ரஹ்மான்,
பழ விற்பனை மொத்த வியாபரிகளின் சங்க தலைவர் முகமது பரூக் மற்றும் செயலாளர் R.வடிவேல், பாலசுப்பிரமணியன் துறையூர் அனைத்து வணிகர் சங்க செயலாளர் காமராஜ் மற்றும் விநியோகிப்பாளர் சங்க தலைவர் அமிர்தலிங்கம் மற்றும் செயலளார் ரவிகாந்த், பொருளார்.சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO