திருச்சியில் மினி கிளினிக் மருத்துவர்கள் பணி நீட்டிப்பு கோரி காத்திருப்பு போராட்டம்

திருச்சியில் மினி கிளினிக் மருத்துவர்கள் பணி நீட்டிப்பு கோரி காத்திருப்பு போராட்டம்

பணி பாதுகாப்பு மற்றும் மாத ஊதியத்தை காலதாமதமின்றி வழங்க கோரி திருச்சியில் மருத்துவ அலுவலர்கள் புதன்கிழமை மாலை சுகாதாரத்துறை அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் மூடப்பட்ட அம்மா மினி கிளினிக்குகளில் பணியாற்றி இப்போது மாற்றுப் பணிகளில் அமர்த்தப்பட்டுள்ள மருத்துவர்களையும் பன்நோக்கு மருத்துவ பணியாளர்களையும் மார்ச் 31ம் தேதியுடன் பணி நீக்கம் செய்யும்படி தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது.

திருச்சி மாவட்டத்தில் 48 கிளினிக்குகளில் 48 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர் அவர்கள் நேற்று மாலை சுப்பிரமணியபுரத்தில் உள்ள திருச்சி மாவட்ட துணை இயக்குனர் (சுகாதாரம்) அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் நேற்று மாலை தங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கும்படி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மருத்துவ அதிகாரி ஒருவர் கூறுகையில், நாங்கள் கொரானா கால கட்டங்களில் நிரந்தர மருத்துவ அதிகாரிகளுக்கு இணையாக பணியாற்றினோம்.

ஆனால் எங்களுக்கான ஊதியம் தாமதமாகிறது என்று கூறினார். இந்த காத்திருப்பு போராட்டத்தில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற சிறு மருத்துவமனைகளை சேர்ந்த மருத்துவர்களும் கலந்து கொண்டனர். இதற்கு சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் உரிய பதில் அளிக்காவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்த மினி கிளினிக் மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO