நெடுஞ்சாலையை கடக்க முயன்ற கூலித்தொழிலாளி பலி
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கருமகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் ஆண்டியப்பன் மகன் பெரியசாமி (57). இவர் மேலமஞ்சம்பட்டியை தங்கி கூலி வேலைகளை செய்து வந்துள்ளார். தினந்தோறும் இரவு திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இடையப்பட்டியான்பட்டி அருகே உள்ள கடைக்கு சென்று வருவது வழக்கம்.
நேற்று (25.11.2022) வெள்ளிக்கிழமை இரவு இருச்சக்கர வாகனத்தில் சென்றவர், சாலையோரம் வாகனத்தினை நிறுத்திவிட்டு சாலை கடந்த நிலையில் எதிர்பாரத வகையில் அவ்வழியாக சென்ற கார் முதியவர் மீது மோதி சென்றதில் உடல் சிதைந்து முதியவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற போலீஸார் பெரியசாமி உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துகுறித்து மணப்பாறை போலீஸார் வழக்கு பதிந்து விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து விசாரித்து வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO