குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கோவாண்டாகுறிச்சி ஆர் சி ஜேம்ஸ் நடுநிலைப் பள்ளியில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் மற்றும் குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நவம்பர் 26 இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி சாக்சீடு நிறுவனத்தின் மூலமாக கோவாண்டாகுறிச்சி ஆர் சி ஜேம்ஸ் நடுநிலைப் பள்ளியில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் மற்றும் குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் இயக்குனர் பரிமளா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர் பெர்னா அனைவரையும் வரவேற்று பேசினார் சிறப்பு விருந்தினராக மாவட்ட குழந்தை நல குழு உறுப்பினர் முனைவர் பிரபு இந்திய அரசமைப்பு தினத்தை முன்னிட்டு அரசியலமைப்பு முகப்புரை உறுதிமொழி எடுக்கப்பட்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பில் மாணவர்களின் பங்கு 

குழந்தைகள் நலன் சார்ந்த சட்டங்களான குழந்தை திருமண தடுப்புச் சட்டம் 2006 பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012 குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம் 1986 குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 மற்றும் இளஞ்சிறார் நீதி சட்டம் 2015 குறித்தும் குழந்தைகளுக்கான அடிப்படை உரிமைகளான வாழ்வதற்கான உரிமை வளர்ச்சிக்கான உரிமை பாதுகாப்பிற்கான உரிமை பங்கேற்பதற்கான உரிமை குறித்து பேசினார்.

குடும்ப நல ஆலோசனை மையம் ஆலோசகர் சசிகுமார் குழந்தை தத்துவளம் மையம் ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ் ஆகியோர் கல்வியின் அவசியம் முக்கியத்துவம் குழந்தைகள் பாதுகாப்பில் உள்ள அரசு அமைப்புகளான குழந்தை நல குழு மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு இளஞ்சிறார் நீதி குழு குழந்தைகள் உதவி மையம் மற்றும் குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண்கள் 1098 குறித்து விழிப்புணர்வு வழங்கினார்கள்.

பெண் குழந்தை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்து வண்ணம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சியில் 180க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision