வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர்  நேரில் ஆய்வு

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மருங்காபுரி ஊராட்சி ஒன்றியம், கலிங்கப்பட்டி ஊராட்சியில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.3.48 இலட்சம் மதிப்பீட்டில் கலிங்கப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பழுது பார்க்கும் பணி நடைபெற்று வருவதையும்,

பள்ளி வளாகம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்டு, வகுப்பறைக்குச் சென்று கல்வி கற்பிக்கும் முறைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார்ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து, மருங்காபுரி ஊராட்சி ஒன்றியம், நல்லூர் ஊராட்சியில் அட்மா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தென்னை மரம் ஏறும் கருவியின் செயல்பாட்டினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து நிலக்கடலை விதைகளை விவசாயிகளுக்கு வழங்கினார். கரடிப்பட்டி ஊராட்சியில், தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பசுமை குடிலின் செயல்பாடுகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

பிராபட்டி ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் விசைத் தெளிப்பான, தார்பாலின், பேட்டரி மூலம் இயங்கும் தெளிப்பான் ஆகியவற்றின் செயல்பாடுகளையும், கன்னிவடுக பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.7.43 இலட்சம் மதிப்பீட்டில் ராஜாபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சமையில் கூடம் அமைக்கும் கட்டுமானப் பணிகளையும்,  வி.இடையபட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.28.99 இலட்சம் மதிப்பீட்டில் வி.இடையப்பட்டி 

ஊராட்சி இறையாணடான் குளம் தூர்வாரும் பணியினையும், மருங்காபுரி ஊராட்சி ஒன்றியம், நாட்டார்பட்டி ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.4.51 இலட்சம் மதிப்பீட்டில் சீகம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு வரும் பணியினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்திட சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். 

 பழைய பாளையம் ஊராட்சியில் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் பள்ளி வளாகம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்டு, வகுப்பறைக்குச் சென்று கல்வி கற்பிக்கும் முறைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். மினிக்கியூர் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.9.5 இலட்சம் மதிப்பீட்டில் மினிக்கியூர் கோனார் குளம் முதல் புதுக்குளம் வாரி சங்கன் பான்ட் அமைக்கும் பணியினையும், பின்னர், அதிகாரம் ஊராட்சியில், கிராம சேவை மையத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு அங்குள்ள உற்பத்தியாளர் குழு உறுப்பினர்களை சந்தித்து திட்டப்பணிகளை பார்வையிட்டு, குழுவாக தொழில் செய்வது தொடர்பாக எடுத்துரைத்தார்.  

இந்நிகழ்வுகளில், மகளிர் திட்ட அலுவலர் கி.ரமேஷ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) மல்லிகா, உதவி திட்ட அலுவலர்கள் எஸ்.இளங்கோவன், ஆர்.நிர்மலா தேவி, மருங்காபுரி ஒன்றியக் குழுத் தலைவர் மு.பழனியாண்டி, வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் சாமிநாதன், மருங்காபுரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாதவன், எம்.தேவநேசன், உதவிப் பொறியாளர் கணேஷ்வரன், தாமரைச்செல்வி உள்ளிட்ட வளர்ச்சித்துறை அலுவலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள்  கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn