திருச்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.3.50லட்சம் மதிப்புள்ள தள்ளுவண்டிகள்
திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சியில் தேசிய நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் கீழ் சாலையோர வியாபாரிகளுக்கு 3.50 லட்சம் மதிப்புள்ள வாகனங்களை நகர்மன்ற தலைவர் கீதா மைக்கேல்ராஜ் பயனாளிகளுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் ஷியாமளா, நகர அமைப்பு அலுவலர் த.வெங்கடேசன், நகர அமைப்பு ஆய்வாளர் குமரேசன், திமுக நிர்வாகிகள் கோபி, ராஜீ, நகர மன்ற உறுப்பினர்கள், நகரமைப்பு அலுவலர், நகரமைப்பு ஆய்வாளர், வங்கி மேலாளர்கள், பாரத மாநில வங்கி,
கனரா வங்கி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, சிட்டி யூனியன் வங்கி, அலுவலகப் பணியாளர்கள் மற்றும் சாலையோர வியாபாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn