ரூ.72.41 இலட்சம் மதிப்பீட்டில் ECARD வாகனங்களை பயன்பாட்டிற்கு வழங்கிய அமைச்சர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இன்று (14.08.2023) 29 ஊராட்சி மன்ற அலுவலகங்களுக்கு ரூ.72.41 இலட்சம் மதிப்பீட்டில் ECARD வாகனங்களை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கி கொடியசைத்து பயன்பாட்டினை தொடங்கி வைத்தார்.
புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆலம்பாடி, ஆலம்பாக்கம், கருடமங்கலம், கல்லகம், கே.கே.நல்லூர், கண்ணாகுடி, கீழரசூர், கோவண்டாக்குறிச்சி, குமுளுர், மால்வாய் முதுவத்தூர், நம்புக்குறிச்சி, என்.சங்கேந்தி, ஊட்;டத்தூர், ஒரத்தூர், பி.கே.அகரம், பெருவளப்பூர், பதூர்பாளையம், பி.சங்கேந்தி, ரெட்டிமாங்குடி, சரடமங்கலம், சிறுகளப்பூர், திண்ணக்குளம், திரணிபாளையம்,
தாப்பாய், வந்தலைக்கூடலூர், வரகுப்பை, இ.வெள்ளனூர், விரகாலூர் ஆகிய 29 கிராம ஊராட்சிகளுக்கு தலாரூ.2,49,700- வீதம் மொத்தம் ரூ.72.41 இலட்சம் மதிப்பீட்டிலான ECARD வாகனங்களை வழங்கி பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, காணக்கிளியநல்லூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின்கீழ் ரூ.10.19 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தினை திறந்து வைத்து, குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி பெட்டகங்களை வழங்கினார்.
மேலும் காணக்கிளியநல்லூரில் தேசிய கிராம சுயாட்சி திட்டத்தின்கீழ் ரூ.23.56 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடத்தினை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.தேவநாதன், இலால்குடி வருவாய் கோட்டாட்சியர் த.சிவசுப்ரமணியன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கங்காதாரிணி,
மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் த.இராஜேந்திரன், ஒன்றிய பெருந்தலைவர் ரஷியாகோல்டன் ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எஸ்.ரவிச்சந்திரன், எஸ்.ராஜேந்திரன், காணக்கிளியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.சிங்கராயர், முன்னாள் தலைவர் ஆர்.ராஜமாணிக்கம், அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision