பஞ்சவர்ணசுவாமி கோவில் அவலநிலை - இந்து முன்னணி குற்றசாட்டு

பஞ்சவர்ணசுவாமி கோவில் அவலநிலை - இந்து முன்னணி குற்றசாட்டு

திருச்சி உறையூரின் மிக முக்கியமான சிவாலயம். சைக்கிள் கண்டு பிடிக்கும் முன்பே சைக்கிள் சிற்பம் என வாட்சப்பில் உலா வந்த சிற்பம் உள்ள சிவாலயம். பாடல் பெற்ற ஸ்தலம். 5 வர்ணங்களாக நிறம் மாறக்கூடிய அளவில் இருந்த சிவாலயம். திருச்சி மாநகரத்தில் வரலாற்று சிறப்பு கொண்ட சிவாலயம்.

தமிழ்நாடு அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள உறையூர் பஞ்சவர்ணசுவாமி கோவிலின் அவல நிலை, கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்துவதற்காக பாலாயம் நடந்து 6 மாதங்களுக்கு மேல் ஆகியும் கோவிலுக்குள் எந்த பணியும் இது வரை ஆரம்பிக்கவில்லை.

கோவில் வெளிப்புறத்தில் மட்டும் பக்தர்களை ஏமாற்றுவதற்காக சும்மா பெயருக்கு சாரங்களை அமைத்து பணி நடைபெறுவது போல மாயயை உருவாக்கி வைத்துள்ளார்கள். பிரதோஷ நேரத்தில் அபிஷேக நீர் செல்லக்கூட முறையான வழியில்லாமல் ஒரு நபரை வைத்து அள்ளி ஊற்றுகிறார்கள். கோவிலுக்கு வருபவர்கள் வாகனங்களை விட்டால் மூலஸ்தானத்திற்கே கொண்டு போய் நிறுத்தி விடுவார்கள் போல,

அது போல தான் காலணிகளையும் நந்தி கிட்டக்க கொண்டு வந்து போட்டுள்ளார்கள். கோவிலுனுள் சாராய பாட்டில்களெல்லாம் உள்ளது. அந்த அளவிற்கு அறநிலையத்துறை கோவிலை பராமரித்து வருகிறது. கோபுரத்தில் உள்ள சிறு சிறு செடிகளை அகற்றாமலே சுண்ணாம்பு அடித்துள்ளார்கள். கும்பாபிஷேகத்திற்கான அனைத்து திருப்பணிகளையும் செய்ய உபயம் வந்துள்ளது என்று கோவில் நிர்வாகம் இந்து முன்னணியினரிடம் தகவல் கொடுத்தனர்.

ஆனால் இதுவரை ஏன் பணி ஆரம்பிக்காமல் கிடப்பில் போடப்படுள்ளது என்ற சந்தேகம் எழுகிறது. இக்கோவிலின் பல்வேறு பிரச்சனைகளுக்காக இந்து முன்னணி பல போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் செய்துள்ளது. கும்பாபிஷேகம் நடத்துவதற்கு தர்ணா போராட்டங்கள் எல்லாம் செய்து ஒரு வழியே பாலாயம் நடத்தி முடித்தார்கள். மீண்டும் களத்தில் இறங்கி அடுத்த ஆர்ப்பாட்டம் செய்தால் தான் கும்பாபிஷேக பணி விரைவாக முடியும் என்று எதிர்பார்க்கிறோம்.

மிக விரைவில் பஞ்சவர்ணசுவாமி கோவில் நிர்வாகத்தை கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision