நாற்றாங்கள் வயலில் விஷ மருந்துகளை தெளித்த மர்ம நபர்கள் - போலீசார் விசாரணை

நாற்றாங்கள் வயலில் விஷ மருந்துகளை தெளித்த மர்ம நபர்கள் - போலீசார் விசாரணை

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பாப்பா குறிச்சியில் தற்பொழுது விவசாய பணிகள் தொடங்கியுள்ளது. இதற்காக நாட்றாங்கள் விடும் பணியானது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பாப்பாகுறிச்சியை சேர்ந்த சொக்கலிங்கம், வீதி வடங்கத்தைச் சேர்ந்த முத்துகுமார், காமராஜ், கோபி, காளிமுத்து, அலாவுதீன், பன்னீர்செல்வம் ஆகியோரின் குத்தகை வயல்களில் ஆந்திர பொன்னி நெல் விதைப்பதற்காக 15 நாட்களுக்கு முன் சுமார் 15 ஏக்கருக்கு உண்டான நாற்றங்கால் விதைக்கும் பணியானது நடைபெற்றது.

தொடர்ந்து விவசாய பணிகளை கவனித்து வந்த விவசாயிகள் பார்வையிட்ட போது நாற்றங்காலில் விஷத்தன்மை வாய்ந்த ஆசிட் மற்றும் பவுடர்களை தெளித்ததால் நாற்றங்கால் ஒரு பகுதி கருகிய நிலையில் உள்ளதை கண்ட விவசாயிகள் போலீசாருக்கும், வருவாய் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருவரம்பூர் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் வயலில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் வயலில் கிடந்த பவுடர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட நாற்றங்காலை சேகரித்து ஆய்வுக்கு அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் இது குறித்து விவசாயிகள் கூறுகையில்.... இந்த பகுதியில் நான்கு தலைமுறையாக குத்தகைக்கு விவசாயம் செய்து வருகிறோம். மேலும் இந்த பகுதியில் நடப்பட்ட நாற்றங்காலை சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து விவசாயத்தை காக்க வேண்டும் கோரிக்கை விடுத்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision