பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

திருச்சி மாவட்டம், இலால்குடி ஊராட்சி ஒன்றியம், தாளக்குடி ஊராட்சியில் ரூபாய் 40 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் கட்டுமானப் பணிகளையும், அப்பாதுரை ஊராட்சியில் அயோத்தி தாஸ் பண்டிதர் திட்டத்தின் கீழ் ரூபாய் 7.80 இலட்சம் மதிப்பீட்டில் ஆதிதிராவிடர் மயானத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணியினையும், நெருஞ்சலக்குடி ஊராட்சியில்

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 14.31 இலட்சம் மதிப்பீட்டில் மாந்துறை கிராமத்தில் புதிதாக அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்திட சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், இலால்குடி ஊராட்சி ஒன்றியம், வாளாடி நியாயவிலைக் கடையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் அளவுகள் குறித்தும், பொருட்களின் இருப்புக் குறித்தும் ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து, இலால்குடி ஊராட்சி ஒன்றியம், வாளாடியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் செயல்பாடுகள் மற்றும் அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், வாளாடியில் உள்ள இ.சேவை மையத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் சரியான முறையில் கணினியில் பதிவேற்றம் செய்யப்படும் செயல்பாடுகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து இலால்குடி ஊராட்சி ஒன்றியம், பம்பரம்சுத்தி ஊராட்சியில் தோட்டக்கலைத்துறையின் சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் நுண்நீர் பாசனம் அமைக்கப்பட்டு டிராகன் பழம் பரப்பு விரிவாக்கம் செய்யும் பணிகளையும், ஆலங்குடி மகாஜனம் ஊராட்சியில் வேளாண்மைத் துறையின் சார்பில் நெல் நாற்றங்கால் அமைக்கப்பட்டுள்ளதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வுகளில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர்கள், ஊராட்சி மன்றத்தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision