திருச்சி காவேரி மகளிர் கல்லூரியில் உலக வன நாள் விழா

திருச்சி காவேரி மகளிர் கல்லூரியில் உலக வன நாள் விழா

இன்று மார்ச் 21ம் தேதியன்று உலக வன நாள் விழா கொண்டாடப்படுகிறது. திருச்சி காவேரி மகளிர் கல்லூரியில் BCA துறை சார்பில் விழாவானது இன்று நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் பேராசிரியர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அவர்களுக்கு காடு குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டதோடு 20 மாணவர்கள் மூலம் மரக்கன்றுகளும் நடப்பட்டன.

இன்றைய தினத்தில் நம் அனைவரும் வெப்ப நிலை உயர்வால் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றோம்.  உலக நாடுகளைப் போன்றே இந்தியாவும் இந்த தாக்கத்தில் இருந்து மாறுபட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கார்பன் வெளியிட்டை சமநிலையாக்குவது அதில் ஒரு முக்கிய இலக்காகும். காடுகள் இயற்கையாகவே கார்பன் டை ஆக்ஸைடை கிரகித்துக் கொள்ளும் தன்மையைக் கொண்டிருப்பதால் காடுகளின் பரப்பை அதிகரிக்க வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் நீண்ட நாள் வேண்டுகோள்கள் ஆகும்.

தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு தமிழகத்தின் மொத்தப்பரப்பில் 33% காடுகள் பரப்பு அதிகரிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. காலநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு சமீபத்தில் வெளியிட்டிருந்த தமிழக நிதி நிலை அறிக்கையில் ரூ. 850 கோடி மதிப்பிலான திட்டங்கள் வரிசைப்படுத்தப்பட்டிருந்தது.

ஒவ்வொரு உலக வன தினத்திற்கும் வனப்பாதுகாப்பிற்கான ஒரு குறிக்கோளை ஐ.நா.சபை அறிவிப்பது வழக்கம். இந்த ஆண்டு குறிக்கோளாக பல்லுயிர் பாதுகாப்புக்கு காடுகளை காப்போம் என்று அறிவித்து உள்ளது. ஒரு நாட்டிற்கு அடர்ந்த இயற்கை காடுகள் மிகவும் அவசியம்என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்திட வேண்டும்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய... https://t.co/nepIqeLanO