கர்நாடக இசை திறமைக்கான ஓர் தேடல் - திருச்சியின் அடையாளமான சாரதாஸ் வழங்கும் ஏழு ஸ்வரங்கள்

கர்நாடக இசை திறமைக்கான ஓர் தேடல் - திருச்சியின் அடையாளமான சாரதாஸ் வழங்கும் ஏழு ஸ்வரங்கள்

தமிழர்களின் இசை வாழ்வியலோடு, உணர்வோடு கலந்தது. பிறந்தது முதல் மறையும் வரை ஒவ்வொரு அங்கத்திலும் இசையை வைத்து தங்கள் வாழ்க்கை முறையை பிணைத்துக் கொண்டவர்கள் தமிழர்கள். கர்நாடக இசை மீதான காதல் உலகம் முழுவதும் படர்ந்து பெருகிக்கொண்டிருக்கும் சமயம் இது. ஆயிரக்கணக்கான புது ரசிகர்கள் இந்த இசை உலகத்துக்குள் அனுதினமும் பிரவேசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கர்நாடக இசையை உலகறிய செய்வதில் மிக முக்கிய நோக்கமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கர்நாடக இசையில் அவர்களுடைய தனி திறமையை உலகிற்கு வழிகாட்டும் விதமாக 2018ஆம் ஆண்டு திருச்சி சாரதாஸ் வழங்கிய 7 ஸ்வரங்கள் நிகழ்ச்சி தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

நிகழ்ச்சி மூலம் தமிழகம் முழுவதும் உள்ள குழந்தைகளும், பெரியவர்களும் பங்கேற்று அவர்களுடைய தனி திறமையை வெளிப்படுத்தினர். 5 முதல் 15 வயதிற்கு உட்பட்டவர்கள், 13 முதல் 21 வயதுக்கு  உட்பட்டவர்கள், 22 முதல் 30 வயதிற்குட்பட்ட மூன்று பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. போட்டியில் கர்நாடக இசைத் துறையில் சிறந்து விளங்கும் இசைக்கலைஞர்கள் நடுவர்களாக பங்கேற்று வெற்றியாளர்களை தேர்வு செய்து செய்வர்.

Vocal, String, Wind, Percussion, Keyboard இப்படி ஐந்து பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு ஒவ்வொரு போட்டியிலும் மூன்று வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியின் வெற்றியால் இரண்டாவது சீசன் இணையவழியில் நடைபெற்றது. இணைய வழி இணைப்பு உலகளாவிய இசைக்கலைஞர்களை ஒன்றிணைக்கும் வகையில் அமைந்ததை தொடர்ந்து இந்த வருடம் மூன்றாவது முறையாக உலகளவில் இந்நிகழ்ச்சியை நடத்திட உள்ளனர்.

இப்போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் ஜனவரி 15.01.2022ஆம் தேதிக்குள்   முன்பதிவு செய்து கொள்ளுதல் அவசியம். www.7swarangal.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் .மேலும் பல விவரங்களும் இணையதளத்தின் மூலமே தெரிந்து கொள்ளலாம். திருச்சி சாரதாஸ் இந்நிகழ்ச்சியை உலகளவில் கொண்டு செல்வதில் பிரம்மாண்டமாக மூன்றாவது சீசன் நடைபெற உள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/LFNwwZ6K29zAPpD8WoDIQc

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn