கர்நாடக வங்கியினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்ற தமுமுக

கர்நாடக வங்கியினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்ற தமுமுக

கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் இஸ்லாமிய பெண்களின் ஹிஜாப்பை அகற்றிவிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு வரவேண்டும் என்ற கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைக் கண்டித்து நாடு முழுவதும் கண்டண ஆர்பாட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில், திருச்சியில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம் சார்பில் தில்லைநகர் சாஸ்திரி சாலையில் உள்ள கர்நாடக வங்கியினை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

முன்னதாக தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராஹிம் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் தில்லைநகர் சாலையிலிருந்து பேரணியாக வந்து கர்நாடக வங்கியினை முற்றுகையிட்டு ஹிஜாப்புக்கு எதிரான தீர்ப்பை கண்டித்தும், இஸ்லாமியர்கள்மீதான பழிவாங்கும் நடவடிக்கையினைக் கண்டித்தும் கண்டண கோஷம் எழுப்பினர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமுமுக மாவட்ட தலைவர் கூறுகையில்.. உயர்நீதிமன்றங்களை பாஜக அரசின் நீதிபதிகளாக மாற்றக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. கண்ணியமாக செல்லும் இஸ்லாமிய பெண்களை ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று கூறுவது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.

இதற்காக போராட்டங்கள் ஆர்பாட்டங்கள் நடந்து வரும் நிலையில், இந்த நிகழ்வு தொடர்ந்தால் கர்நாடகாவையும், ஆளும் பாஜக முதல்வரையும் கண்டித்து கர்நாடகா செல்ல தயாராக உள்ளதாகவும் தெரிவித்தனர். ஹிஜாப்புக்கு எதிரான ஆர்பாட்டங்களில் நீதிபதிகளை விமர்சனம் செய்யவில்லை, நீதிபதிகள் ஆட்சியாளர்களின்கீழ் சென்று விட்டதன் கண்டனத்தை பதிவு செய்வதாகவும், ஜனநாயக முறையிலேயே கண்டணத்தை பதிவு செய்கின்றனர் என தெரிவித்தார். இந்த முற்றுகைப் போராட்டத்தின் காரணமாக வங்கியைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO