பெரம்பலூரில் செல்லுமிடமெல்லாம் எதிர்ப்பு.. திணறும் திமுக வேட்பாளர்
பெரம்பலூர் தொகுதியில் பிரசாரம் செய்யும் திமுகவினர் மக்களின் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டு வருவது திமுக வேட்பாளர் அருண் நேருவுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
அமைச்சர் நேருவின் மகன் என்ற பின்னணியுடன் களமிறங்கியுள்ள அருண் நேருவுக்கு வெற்றி எளிதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிரசாரத்தின்போது பல இடங்களில் மக்களின் கடுமையான எதிர்ப்பையும் கேள்விகளையும் சமாளிக்க முடியாமல் திமுக தரப்பு திணறி வருகிறது. குறிப்பாக, பெரம்பலூர் எம் எல் ஏ பிரபாகரனுக்கு செல்லுமிடங்களிலெல்லாம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது திமுக வேட்பாளர் அருண் நேருவின் பிரசாரத்துக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
அதேபோல் இஸ்லாமிய சமுதாயத்தினர் நிறைந்த வி களத்தூர் பகுதியில் அந்தச் சமுதாயத்தினர் ஆவேசத்துடன் எதிர்ப்புத் தெரிவித்தது திமுக தரப்பில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
உரிமைத்தொகை கிடைக்காத பெண்கள் பிரசாரம் செய்ய வந்த உதயநிதியிட்ம எழுப்பிய கேள்விகளால் அவர் மட்டுமன்றி திமுக நிர்வாகிகளும் அதிர்ந்து போயினர்.
இதுபோல், பல இடங்களில் வாக்காளர்கள் திமுகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவது திமுக வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
எளிதில் வென்றுவிடலாம் என்ற எண்ணத்துடன் களமிறங்கிய அருண் நேரு இப்போது என்ன செய்வதெனத் தெரியாமல் திகைத்து வருவது எதிர்த்தனப்பினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. இதனால் பெரம்பலூர் தொகுதியில் தேர்தல் களம் யாருக்கு வெற்றிவாய்ப்பு என்பதை எளிதில் கணிக்க இயலாத அளவுக்கு வெகு சுவாரசியமாக மாறியுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://www.threads.net/@trichy_vision