உடைந்தது கூட்டணி... என் வழி தனி வழி அண்ணாமலை ஆட்டம் ஆரம்பம் !!

உடைந்தது கூட்டணி... என் வழி தனி வழி அண்ணாமலை ஆட்டம்  ஆரம்பம் !!

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே, தேர்தல் வரும் பின்னே கூட்டணிக்கட்சிகளுக்குள் பிரச்சனை வரும் முன்னே என்பதாக கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் அக்னி நட்சத்திரம் போல தக தக என சூடுபறந்து கொண்டு இருக்கிறது. இதற்குக்காரணம் அண்ணாமலை தான் என்றால் அது மிகையல்ல ”என் மண் என் யாத்திரை” எனத்தொடங்கி தமிழகம் முழுவதும் யாத்திரை சென்று கொண்டிருக்கிறார். செல்லும் இடமெல்லாம் கூட்டம் கூடுவது என்னவோ உண்மை என்றாலும்கூட நுணலும் தன் வாயால் கெடும் என்பது போல இந்த முன்னாள் ஐ.பி.எஸ் ஆபிஸர் போடும் குண்டு எதிர் கட்சி என்று இல்லாமல் கூட்டணிக்கட்சியினரிடமும் சலசலப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது.

எந்த ஊருக்குப்போனாலும் அந்த ஊரில் நடந்த மக்கள் மறந்த கதைகளை பேசி நினைவூட்டி எழுச்சியை ஏற்படுத்துகிறார். இறந்துபோனவர்களைப்பற்றி இப்ப பேசி என்ன ஆகப்போகிறது என்றால் மறந்து போனவர்களைப்பற்றி உண்மைகளை எடுத்துச்சொல்வதில் என்ன தயக்கம் என எதிர்கேள்வி கேட்கிறார் அண்ணாமலை என்கிறார்கள்.

இதுநாள் வரை ஆண்டு கொண்டிருக்கும் திமுகவை வறுத்தெடுத்தவர் தற்பொழுது அதிமுக பக்கமும் அதிரடியை காட்டத்தொடங்கியிருக்கிறார் என்கிறார்கள் விபரமானவர்கள்,  அதன் வெளிப்பாடுதான் மதுரையில் தேவர் அண்ணாதுரை பேச்சு என்கிறார்கள். அதற்கு அதிமுகவினர் எதிர்வினையாற்ற என்னை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என் வழி தனி வழி என கர்ஜனையை தொடங்கியுள்ளாராம்.

சரி அப்படினா மூன்றாவது அணி அமையுமா அது இன்றைக்கு அதிமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்போகும் முடிவில் தெரியவருமாம், ஒன்று ஜெயக்குமாருக்கு கெல்தா கொடுக்கலாம் அல்லது அண்ணாமலை இருக்கும் கூட்டணியில் பாஜக இருக்காது அப்படித்தானே அப்படித்தான் ஒருசிலர் சொல்கிறார்கள்.

ஆனால் அண்ணாமலை கணக்கு வேறுமாதிரி இருக்கிறதாம் தென் இந்தியாவில் பெங்களூ நீங்கலாக எப்படியும் நம்முடைய கூட்டணிக்கு பலம் இல்லை வெற்றி வாய்ப்பும் இல்லை என்ற பிம்பத்தை முதலில் உடைக்க வேண்டும் இந்நிலையில் எதற்காக இரண்டு ஆண்ட ஊழல் கட்சிகளையும் மீண்டும் மீண்டும் நாம் தோளில் சுமக்க வேண்டும். நம்முடைய குறிக்கோள் 2024ல் நாடாளுமன்றத்தை கைப்பற்றுவதுதான் நம்முடைய குறிக்கோள் அதற்கு எதற்காக இவர்களை இப்பொழுது கூட்டணி சேர்க்க வேண்டும். ஆளாத கட்சிகளை ஒன்று சேர்த்து புதிய அணி ஒன்றிணை கட்டமைப்போம் திக்குக்கு ஒருவராக களமிறங்குவோம் அதற்கு நாடாளுமன்ற தேர்தல் ஒரு தேர்வாக இருக்கட்டுமே என்கிறாராம்.

அப்படி ஒருவேளை இந்த ஃபார்முலா வெற்றி பெற்றால் வரும் சட்டமன்ற தேர்தலிலும் இதே ஃபார்முலாவை பின்பற்றுவோம் என முடிவெடுத்திருக்கிறார்கள். அத்தோடு சில முக்கிய பாஜகவிற்கு வேண்டியவர்கள் அன்புமணி, பிரேமலதா, சசிகலா, ஓ.பி.எஸ் ஆகியோரோடு தனிப்பட்டமுறையில் பேசி வருவதாகவும் கமலாலய வட்டாரத்தில் காதைக்கடிக்கிறார்கள். இதையெல்லாம் விட ஒரு முக்கியமான விஷயமும் கசிகிறது ஆண்ட கட்சியில் இருந்து மூன்று முக்கிய அமைச்சர்கள் இங்கே வருவதற்கு தயாராகிவிட்டார்களாம். அதே போல ஆண்டுக்கொண்டிருக்கும் கட்சியில் சிலர் மெளனம் காத்து வருவதை நீங்கள் நன்றாக அறிவீர்கள் அவர்களின் மனநிலை தலை தப்பினால் தம்பிரான் புண்ணியம் மேலே இவர்கள் ஆட்சி இருக்கும் வரை நமக்கு எந்த பிரச்சனையும் வராது ஆகவே நாங்கள் உங்களுக்கு நேரடியாக உதவ முடியாவிட்டாலும் மறைமுகமாக உதவுகிறோம் என பச்சைக்கொடியை பறக்கவிட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள்.

ஆகவே அண்ணாமலையைப்பொறுத்த வரை இது டெஸ்ட் வெற்றியோ தோல்வியோ நமது இலக்கு வரும் சட்டமன்ற தேர்தல்தான் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி வருகிறாராம். இவர் போட்டிருக்கும் ஸ்கெட்சில் ஏ.சி.சண்முகம் பூவை ஜெகன்மூர்த்தி செ.கு தமிழரசன் ஆகியோரும் உண்டு என்கிறார்கள் இன்னும் சிலரும் இந்த கூட்டணியில் இணைவதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார்களாம்.

அப்படினா அடுத்த ஒரு மக்கள் நலக்கூட்டணியா ? என்றால் மக்களுக்கு மகிழ்ச்சி கூட்டணி தோல்வியடைந்தால் இவர்களுக்கு ஒரு பாடம் வரும் தேர்தல்களிலும் பயத்தை காட்டிட்டியே பரமா என மாற்றம் நிகழும் என்கிறார்கள் அதுவும் சரிதான் எத்தனை நாட்கள்தான் உனக்கு குச்சி மிட்டாய் எனக்கு குல்பி ஐஸ் என காலத்தை ஓட்டுவது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision