திருச்சி மாவட்டத்தில் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு
2023 செப்டம்பர் 28 அன்று மிலாடி நபி (வியாழன் கிழமை) மற்றும் அக்டோபர் 2 அன்று காந்திஜெயந்தி (திங்கள் கிழமை) மேற்படி தினங்களை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும், (FL1) மூடப்பட்டிருக்கும்,
அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள் மற்றும் FL2/FL3/FL3A/FL3AA & FL11 வரையிலான ஹோட்டல் பார்களிலும் மதுபானம் விற்பனை இன்றி மூடப்பட்டிருக்கும். மேலும், அன்றைய தினத்தில் மதுபானங்களை விற்பனை செய்வதையும், வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும்,
மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision