நாங்கள் சுத்தம் செய்யவில்லை என்றால் நாறிவிடும் - திருச்சியில் அமைச்சர் நேரு பேச்சு

நாங்கள் சுத்தம் செய்யவில்லை என்றால் நாறிவிடும் - திருச்சியில் அமைச்சர் நேரு பேச்சு

திருச்சி மலைக்கோட்டை அருகே உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் - தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்தில் ஓய்வு பெற்ற மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ஓய்வு கால பணப்பலன்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அரசு போக்குவரத்து துறை கும்பக்கோனம் கோட்டத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற பணியாளர்கள், மேலும் போக்குவரத்து துறையில் பணியாற்றி இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணப்பலன்கள் வழங்கல் என மொத்தம் 669 பயனாளிகளுக்கு 196.47 கோடி மதிப்பீட்டில் பனப்பலன்களை அமைச்சர்கள் வழங்கினர்.

இதில் பேருரை ஆற்றிய அமைச்சர் கே.என்.நேரு..... இன்று கும்பகோணம் கோட்டத்தில் தான் சிறப்பாக பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர் என்று கூறுகிறோம். நாளை மதுரைக்கு சென்றால் மதுரை கோட்டத்தில் பணியாற்றுபவர்கள் தான் சிறப்பாக பணியாற்றுகிறோம் என்போம். இதை எல்லாம் பெரிதுப்படுத்தக்கூடாது ...

போக்குவரத்து துறை தான் ஓயாமல் உழைக்கிறது என்கிறீர்களே? நாங்கள் ஒரு நாள் சுத்தம் செய்யவில்லை என்றால் உங்கள் போக்குவரத்து துறை எண்ணாகும் - ((கிண்டலாக பேசிய கே.என்.நேரு )) எல்லாத் துறைகளின் சேவை மிக முக்கியமானது. ஆனால் நகராட்சி நிர்வாக துறை மிக முக்கியமானதாக உள்ளது. நாங்க ரெண்டு மணி நேரம் சுத்தம் செய்யவில்லை என்றால் நாறிப் போய்விடும்

வருடத்திற்கு 3000 அரசு பேருந்துகள் நம் துறையின் கீழ் வாங்க வேண்டும் என்கிற திட்டத்தை கொண்டு வந்தது நாம் ஆட்சியில் இருந்த போது தான். கலைஞர் காலத்தில் தான் அதிகமான போக்குவரத்து துறை பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். 15 ஆண்டுகளில் போக்குவரத்து துறையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு வருடம் தோறும் ஊதிய உயர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தொழிலாளிகளின் ஓய்வுதிய பலன் பிரச்சினையை தீர்த்து வைத்துள்ளார்கள். இது மிக மிக வரவேற்கதக்கது. ஓய்வூதிய பலன்களை அப்போது எல்லாம் 5 வருடம் கூட கொடுக்க முடியாத நிலை எல்லாம் இருந்தது. ஆனால் தற்போது ஓய்வு பெற்று வீட்டிற்கு செல்லும் போதே வாங்கி விட்டு செல்லாலாம் என தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn