காவிரி கரைகளில் ஒரே நாளில் 40 டன் கழிவுகள் அகற்றம்!!

காவிரி கரைகளில் ஒரே நாளில் 40 டன் கழிவுகள் அகற்றம்!!

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை தமிழ்நாட்டு மக்களால் மகாளாய அமாவாசை என்று கடைபிடிக்கபடுகிறது. இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக காவிரி கரையோரங்களில் அதிகளவில் மக்கள் கூடுவார்கள். 

இந்நிலையில் நேற்று மகாளாய அமாவாசையை முன்னிட்டு மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாநகராட்சியின் சார்பில் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக முக்கியமான படித்துறைகளான அம்மாமண்டபம் படித்துறை, ஓடத்துறை படித்துறை போன்ற ஐந்து படித்துறைகளில் சுத்தம் படுத்தும் பணிகளில் சுகாதார பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். 

இதில் காய்கறி கழிவுகள், உணவு கழிவுகள், பூ மாலைகள், சாப்பிட்ட இலைகள் என 40 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டது. முக்கியமான நாட்களில் இதுபோன்ற சுத்தம்படுத்தும் பணிகளை மாநகராட்சி மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision