திருச்சியில் அரசு பள்ளி ஆசிரியரைக் கண்டித்து இரண்டாவது நாளாக தலைமையாசிரியை அலுவலகத்தை முற்றுகையிட்ட பெற்றோர்கள்

திருச்சியில் அரசு பள்ளி ஆசிரியரைக் கண்டித்து இரண்டாவது நாளாக தலைமையாசிரியை அலுவலகத்தை முற்றுகையிட்ட பெற்றோர்கள்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி சமூக அறிவியல் ஆசிரியர் பழனிச்சாமி தொடர்ந்து பள்ளிக்கு வராமல் அலுவலக பணி என கூறிவிட்டு, சொந்த வேலையாக வெளியூர் செல்வதால் பழனிச்சாமி ஆசிரியருக்கு பதிலாக அவரது சொந்த செலவில் அனிதா என்ற பெண்ணை ரூபாய் 3000 சம்பளத்திற்கு பாடம் நடத்த சி இ ஓ. ,டி இஓ, அனுமதியின்றி தன்னிச்சையாக நியமித்து உள்ளார் ஆசிரியர் பழனிசாமி. இவரது செயலை கண்டித்து அப்பகுதி மக்கள் பள்ளி தலைமை ஆசிரியர் அலுவலகத்தை இரண்டாவது நாளாக முற்றுகையிட்டனர் ..

முற்றுகையிட்ட பெற்றோர்களிடம் லால்குடி மாவட்ட கல்வி அலுவலர் அம்பிகாபதி மற்றும் சமயபுரம் காவல் ஆய்வாளர் பொன்ராஜ் , கிராம நிர்வாக அலுவலர் தவசுமணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் ஆசிரியர் பழனிச்சாமி மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால் முற்றுகை போராட்டத்தை பெற்றோர்கள் கைவிட்டனர்.

இது தொடர்பாக லால்குடி மாவட்ட கல்வி அலுவலர் அம்பிகாபதி யிடம் கேட்டபோது உரிய விசாரணை செய்து , விசாரணை அறிக்கையினை திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் ஒப்படைக்கவுள்ளேன் என செய்தியாளர்களிடம் கூறினார்..

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய... https://t.co/nepIqeLanO