முன்னாள் அமைச்சரை இருகரம் கூப்பி வரவேற்று சர்ச்சையில் சிக்கிய உதவி ஆய்வாளர்
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் திமுக நிர்வாகியை சட்டையை கழட்டி அரை நிர்வாணமாக கையை கட்டி இழுத்துச் சென்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமினை தொடர்ந்து திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் 5வது நாளாக இன்று காலை கையெழுத்திட்டார்.
முன்னதாக ஜெயக்குமார் கையெழுத்திட கண்டோன்மென்ட் காவல் நிலையத்துக்குள் வந்தபோது அவருடன் வழக்கறிஞர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் காவல் நிலைய வாயிலில் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர் .தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
காவல் நிலையத்தில் ஜெயக்குமார் கையெழுத்திட்ட பொழுது கண்டோன்மென்ட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கணேசமூர்த்தி அவருக்கு எழுந்து நின்று இருகரம் கூப்பி வணக்கம் தெரிவித்தார். நீதிமன்ற உத்தரவால் நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திடும் முன்னாள் அமைச்சர் காவல் நிலையத்துக்கு வரும்பொழுது காவல்நிலைய உதவி ஆய்வாளர் எழுந்து இருகரம் கூப்பி வணக்கம் தெரிவித்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK
#டெலிகிராம் மூலமும் அறிய... https://t.co/nepIqeLanO