விக்னேஷ் வித்யாலயா பள்ளியில் விளையாட்டுப் போட்டிகளில் வென்றொர்க்குப் பரிசு

விக்னேஷ் வித்யாலயா பள்ளியில் விளையாட்டுப்  போட்டிகளில் வென்றொர்க்குப் பரிசு

திருச்சி மாவட்டம், கூத்தூர் ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா சீனியர் செகண் டரி பள்ளியில் நடைபெற்ற நிறுவனர் விருதாசலம் நினைவு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

கடந்த 25-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்வில் மருத்துவர் ராஜவேலு, தொழிலதிபர் கோகுல் ஆகியோர் போட்டிகளைத் தொடக்கி வைத்தனர்.

14,18 வயதுக்குள்பட்டோர் என இருபிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, இருபாலருக்கும் தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டன.

கபடியில் 30 அணிகளும், கோ-கோவில் 20 அணிகளும், கையுந்துப் பந்தில் 22 அணிகளும், கால்பந்தில் 30 அணிகளும், கூடைப் பந்தில்53 அணிகளும் பங்கேற்றன.

இறகுப்பந்துப் போட்டியில் 600 போட்டி யாளர்களும், வில்வித்தையில் 68 போட்டியாளர்களும், யோகாவில் 265 போட்டியாளர்களும், சதுரங்கத்தில் 186 போட்டியாளர்களும், ஸ்கேட்டிங்கில் 170 போட்டியாளர்களும் கலந்து கொண்டனர்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் போட்டிகளில் பங்கேற்றனர்.இப்போட்டிகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது. 

தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கிரடாய் துணைத் தலைவர் ஆர்.எஸ்.ரவி, இறகுப் பந்து விளையாட்டு கூட்டமைப்பின் மாநிலத் துணைத்தலைவரும், திருச்சி மாவட்ட செயலாளருமான என்.டி.ராஜ்மோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று, பரிசுகளை வழங்கிப் பாராட்டினர்.

தொடக்க மற்றும் நிறைவு விழாவில் விக்னேஷ் குழுமத்தின் தலைவரும், பள்ளித் தாளாளருமான வி.கோபிநாதன், அறங்காவலர்கள் சகுந்தலா விருதாசலம், 

லட்சுமிபிரபா கோபிநாதன், இயக்குநர் ஆர். வரதரா ஜன், பள்ளி முதல்வர் தயானந்தன் மற்றும் இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

பல்வேறுபோட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக்கோப்பையும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj

#டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.co/nepIqeLanO