திருச்சியில் சிவாஜி சிலை திறக்கப்படுமா நடிகர் பிரபு பேட்டி

திருச்சியில் சிவாஜி சிலை திறக்கப்படுமா நடிகர் பிரபு பேட்டி

 "எங்கள் முதல்வர், எங்கள் பெருமை " என்ற தலைப்பில், தமிழ்நாடு முதலமைச்சரின் வாழ்க்கை வரலாறு அடங்கிய புகைப்பட கண்காட்சியை திருச்சியில் திரைப்பட நடிகர் பிரபு தொடங்கிவைத்தார்.

திருச்சி தூய வளனார் (செயின்ட் ஜோசப்) கல்லூரி மைதானத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70வதுபிறந்த நாளை கொண்டாடும் வகையிலான இக்கண்காட்சியை கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என். நேரு ஏற்பாடு செய்திருந்தார். 

இதனை இளைய திலகம் நடிகர் பிரபு திறந்து வைக்க, இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன்,திருச்சி மாநகர திமுக செயலாளரும், மாநகராட்சி மேயருமான அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, காடுவெட்டி தியாகராஜன், சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், இனிகோ இருதயராஜ், , அப்துல் சமத், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி உள்ளிட்ட கழக நிர்வாகிகளும், பொதுமக்களும் பங்கேற்று பார்வையிட்டனர்.

 செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் பிரபு ......

திருச்சி பாலக்கரை ரவுண்டானாவில் நிறுவப்பட்டு நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் உள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலையை திறந்து வைக்க நீங்கள் வலியுறுத்துபடுமா என்ற கேள்விக்கு.....

கண்டிப்பாக சிலையை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு திறந்து வைப்பார் என்று நம்புகிறேன்.

இவ்வளவு நாட்களாக சட்டரீதியாக பல்வேறு பிரச்சனைகள் இருந்த காரணத்தினால் சிலை திறக்கப்படாமல் இருந்தது. ஆனால் தற்போது அதனை திறப்பார்கள் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது என்றார்.

# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

 

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn