திருச்சியில் கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா

திருச்சியில் கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா

கழகத் தலைவர் -  தமிழ்நாடு முதலமைச்சர் -70 பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி கிழக்கு மாநகர திமுக சார்பில், மாபெரும் பட்டிமன்றம் மற்றும் கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா நடைப்பெற்றது

சிறப்புரை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும் - கழக முதன்மைச் செயலாளரும் - கே.என்.நேரு மற்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், மாவட்ட கழக செயலாளர், அன்பில் மகேஸ் பொய்யாமொழி பட்டிமன்றத்தை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்கள்.

              திருச்சி தெற்கு மாவட்டம், திருச்சி கிழக்கு மாநகர திமுக கழகத்தின் சார்பில், அரிமா 70 என்ற தலைப்பில் கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் பட்டிமன்றம் மற்றும் கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா 22/4/2023 சனிக்கிழமை திருச்சி தேவர் ஹாலில், திருச்சி கிழக்கு மாநகர கழகச் செயலாளர் மு.மதிவாணன் தலைமையில் நடை பெற்றது. 

    இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சரும், கழக முதன்மைச் செயலாளருமான, கே.என்.நேரு அவர்கள் மற்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், மாவட்ட கழக செயலாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கூட்டத்தை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினர்.

பட்டிமன்றத்தின் தலைப்பு :- திராவிட மாடல் ஆட்சியில் பெரிதும் மிளிர்வது,

1. ஒளிரும் தன்மானமே,

2. மலரும் மக்கள் பணியே என்ற தலைப்பில் பேச்சாளர்கள் பேசினர். பட்டிமன்ற நடுவராக கழக கொள்கை பரப்புச் செயலாளர் திண்டுக்கல் ஐ. லியோனி கலந்து கொண்டு பேசினார்

இந்த நிகழ்வில் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் தியாகராஜன் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மாநகர மேயர் மு.அன்பழகன் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சேகரன் சபியுல்லா வன்னைஅறங்கநாதன் , பொதுக்குழு உறுப்பினர்கள் மணிமேகலை ராஜேஸ்வரன் மாவட்ட துணை செயலாளர் செங்குட்டுவன் லீலாவேலு, மூக்கன் நகரத் துணைச் செயலாளர்கள் பொன்செல்லையா நூர்கான் தமிழ்ச்செல்வன் சரோஜினி சந்திரமோகன் பகுதி கழகச் செயலாளர் பாபு மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்டக் கழக செயலாளர் மற்றும் நிர்வாகிகள் மாமன்ற உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள், ஒன்றிய, நகர, மாநகர சேர்மன்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், கழக மூத்த முன்னோடிகள், மாவட்ட கழக பேச்சாளர்கள் தொண்டர்கள் என திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.