திருச்சி காவேரி மருத்துவமனையில் மூளைகட்டி குறித்த விழிப்புணர்வு தின நிகழ்ச்சி
ஒவ்வொரு வருடமும் ஜூன் 8ம் தேதி மூளைகட்டிகள் குறித்த விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஒரு சில வருடங்களுக்கு மும்பு ஒருவருக்கு மூளையில் கட்டி இருப்பதாகத் தெரிந்தாலே அவரின் வாழ்க்கையே முடிந்து விட்டதாகக் கருதப்பட்டது. ஆனால் இப்போதோ விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக மூளைக் கட்டிகள் இருந்தாலும் அதற்கான முறையான சிகிச்சைகள்இருக்கிறது.
புதிதாக ஏற்படக்கூடிய அதிக தலைவலி, கை கால்கள் பலவீனம் பார்வைக் கோளாறு, பேச்சில் தடுமாற்றம், முழுங்குவதில் சிரமம் இவை ஒருவருக்குக் காணப்பட்டால் கட்டாயம் அவர்உடனே ஒரு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரை ஆலோசிக்க வேண்டும். இதே பிரச்சனைகள் குழந்தைகளுக்கு ஏற்பட்டால் தமதமின்றி உடனே சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும், தற்போதைய தொழில் நுட்ப வசதிகளுடன் கூடிய மைக்ராஸ்கோப் மற்றும் ஜி.பி.எஸ் மூலம் அறிகுறிகளை ஆரம்ப நிலையிலே கண்டறிவதன் மூலம் பின்விளைவுகளைப் பெரும்பாலும் குறைக்க முடிகிறது.
மூளையில் வரக்கூடிய கட்டிகளில் 60லிருந்து 70சதவீதம் சாதாரணக் கட்டிகள் தான், புற்றுநோய் கட்டிகள் இல்லை அப்படியே புற்றுநோய் கட்டிகளாக இருந்தாலும் நவீன தொழில் நுட்பத்தின் காரணமாக கட்டிகளின் மூலக்கூறுகள், டி.என்.டி மற்றும் ஆர்.என்.டி குறித்தும் அறிந்து கொள்ள முடிவதால் அதற்கேற்ப அந்தந்தக் கட்டிகளுக்கு முறையான சிகிச்சைகளை அளிக்க முடிகிறது. மேலும் இது போன்ற தொழில்நுட்ப உபகரணங்களை கொண்டு மூளைக் கட்டிகளுக்கானசிகிச்சைகளை நமது திருச்சி காவேரி மருத்துவமனை சிறப்பாக அளித்து வருகிறது. “நம்பிக்கை இழக்காதீகள், மூனைக் கட்டிகளுக்கும் முறையான சிகிச்சை உண்டு" என்பதே இந்த நாளின் மிக முக்கியமான செய்தி மன காவேரி மருத்துவமான மருத்துவர்கள் கூறினர்.
இந்நிகழ்வில், Dr. D. செங்குட்டுவன், இணை நிறுவனர் மற்றும் இயக்குனர் Dr. G. ஜோஸ், ஜாஸ்பர், தலைமை மருத்துவர் மூளை மற்றும் தண்டுவட சிகிச்சை மையம், Dr. R.ராஜேஸ், மருந்துவ நிர்வாகி Dr.K. மதுசூதன், மூளை மற்றும் தண்டுவட சிகிச்சை நிபுணர், Dr.ஸ்ரீஹரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO