4 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசு வேலை வாய்ப்பு - மத்திய இணை அமைச்சர் திருச்சியில் பேச்சு
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் வேலை வாய்ப்பு விழாவில் கலந்துகொண்ட மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் 6வது ரோஜ்கார் மேளாவில் பேசினார். அப்போது ...ஒரே ஆண்டில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை கொடுக்கப்படும் என பாரத பிரதமர் மோடி அறிவித்தார். அதன் அடிப்படையில் இன்று நடைபெறும் 6வது வேலை வாய்ப்பு முகாம் வரை4 லட்சம் 20 ஆயிரம் பேருக்கு இதுவரை வழங்கி உள்ளோம். மீதம் உள்ளவர்களுக்கு கூடிய சீக்கிரம் வழங்க உள்ளோம்.
வருங்காலத்தில் வளமான இளைஞர்களை உருவாக்க வேண்டும் என்பதை மையப்படுத்தி 10 லட்சம் வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. இன்று 71 ஆயிரம் பேர் பங்கேற்று வேலைவாய்ப்பு ஆணையை பெறுகின்றனர். ரோஜ்கர் மேளா, இளைஞர்களை ஊக்குவித்து மத்திய அரசு பணிகளில் சேர்வதற்கான முயற்சியில் பாரத பிரதமர் மோடி கொண்டு வந்தார். 9 ஆண்டுகளில் பாரத பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின்பு மிக மகத்தான நலன்களை செய்து வருகிறார். மக்களுக்கான சேவையும், ஏழைகளின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர்..... தேசிய நெடுஞ்சாலைகளின் கட்டமைப்பு, கப்பல் துறையின் கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகள் மிகப்பெரிய அளவில் நடத்தி இருக்கிறோம். இந்தியாவின் ஜவுளி துறையில் மிகப்பெரிய ஏற்றுமதி செய்து வருகிறோம். 2014ல் மெட்ரோ ரயில் திட்டம் 5 நகரங்களில் தான் இருந்தது. 9 ஆண்டுகளில் 27 நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் விரிவு படுத்தி சாதனை படைத்தது நரேந்திர மோடி தான். அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம், ஜல் ஜீவன் திட்டம் மூலம் அனைத்து தரப்பு மக்களும் ஒவ்வொரு வீட்டுக்கும் சுத்தமான சுகாதாரமான தண்ணீரை கொடுத்து வருகிறோம்.
ஏழை தலித் மக்களுக்கு தலித் யோஜனா திட்டத்தின் மூலம் ஒரு கிலோ அரிசி ஒரு கிலோ பருப்பு திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். நம்ம மாநிலங்களில் தான் முககவசம் அணியாமல் இருக்கிறார்கள். மற்ற மாநிலம் இன்னும் முககவசம் அணிந்து கொண்டுதான் உள்ளனர். உலக நாடுகளை சாந்திராமல் நம்முடைய சொந்த முயற்சியினால் நம்முடைய பாரத பிரதமர் 260 கோடி மாஸ் தயாரித்து நம்மளுக்கு கொடுத்தது மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்துள்ளார் நம்மளுடைய பாரத பிரதமர். புதிய தேசிய கல்விக் கொள்கையை கொண்டு வந்து சர்வதேச அளவில் நாம் போட்டி போட்டு பெரிய பதவிக்கு வரவேண்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்டது. 2014 முன்னாடி வெறும் 500 புதிய கம்பெனிகள் தான் இருந்தது. 9 ஆண்டுகளில் 1 லட்சம் புதிய கம்பெனிகள் தொடங்கி பெரிய நாடாக நாம் கொண்டிருக்கிறோம்.
நம்முடைய பொருளாதாரம் நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். 5வது பொருளாதர நாடாக நாம் உயர்ந்து கொண்டு இருக்கிறோம் அதற்கு காரணம் நம்முடைய பாரத பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கையாக தான். உக்ரைன் போர் முனையில் 23 ஆயிரம் மருத்துவ மாணவர்களை ஆப்ரேஷன் கங்கா என்ற திட்டத்தில் நாம் நாட்டுக்கு கொண்டு வந்துள்ளோம். ஆஸ்திரேலியா, பப்புவா நியூ கினியா நாட்டுக்கு சென்ற அங்கு அந்நாட்டு பிரதமர் கொரோனா காலத்தில் இன்று பாரத பிரதமரிடம் நன்றி தெரிவித்தது இந்தியாவிற்க்கு பெருமையாக இருக்கிறது.
நம்முடைய உள்நாட்டு போர் உதிரி பாகங்கள் தயாரித்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறோம் சென்னை, கோயமுத்தூர்,திருச்சிராப்பள்ளி இருந்து ஏற்றுமதி செய்கிறோம்.
ஜி20 பல நாட்டுத் தலைவர்கள் கூட்டமைப்பில் இணைந்து தொழில்துறை, நிதித்துறை, வர்த்தகத் துறை, பள்ளிக்கல்வித்துறை விவசாயத்துறைகளை பொறுத்த வரைக்கும் பரிமாறிக் கொள்ளும் ஒரு வருடம் முழுவதும் நம்மளுடைய ஜி20 மாநாடு நடைபெற்றது.
நான் அரசியல் பேசினால் நல்லா இருக்காது.அப்போது பிரதமர் சொன்னார் 1 ரூபாய் திட்டம் 13 பைசா மட்டுமே பயனாளிகளுக்கு சென்றடைகிறது.
டிஜிட்டல் பணம் மாற்றும் முறையை கொண்டு வந்தோம். நேரடியாக மக்களுக்கு கொண்டு சேர்ப்பது 11 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்குக்கு பணம் செலுத்தும் முறை கொண்டு வந்து இருக்கிறது.2047 மிகப்பெரிய வல்லமை மிக்க ஆற்றல் மிக்க நாடகவும், உலகத்தையே ஆளுகின்ற நாடாக உருவாகி வருகிறோம். அடுத்த 25 ஆண்டுகளில் நம்முடைய நாடு மிகப்பெரிய முன்னேறிய நாடாக நாம் அனைவரும் அனைவரும் முன்னேற்றத்திற்காக அனைவரின் வளர்ச்சிக்காக இணைந்து செயல்படுவோம் என்றார்.
முன்னதாக வேலைவாய்ப்பு விழாவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களில் பணிபுரிய 243பேருக்கு பணி நியமன ஆணை மத்திய இணை அமைச்சர் வழங்கினார்.