கொலை குற்றவாளி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

கொலை குற்றவாளி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

திருச்சி மாநகரம், காந்திமார்க்கெட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட W.B ரோடு, மரக்கடை சந்திப்பில் உள்ள பொது கழிப்பிடம் அருகில் கடந்த 13.09.21-ந்தேதி ரிசாந்த் என்பவரை மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டதாக அவரது தாய் பாப்பாத்தி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் காந்திமார்க்கெட் காவல்நிலையத்தில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கினை காந்திமார்க்கெட் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் புலன் விசாரணை செய்து, முன்பகை காரணமாக மேற்படி ரிசாந்த் கொலை செய்யப்பட்டதாக தெரிய வந்த நிலையில் எதிரிகளை பிடிக்க திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் உத்தரவுப்படி தனிப்படை அமைக்கப்பட்டு, மேற்படி வழக்கில் 1.சூர்யா 2.ஸ்டீபன், 3.வேலு (என்கிற) ராஜதுரை, 4.கருப்பு (என்கிற) ஹமீது, 5.வெங்கடேஷ் (என்கிற) வெட்டு வெங்கடேஸ், 6.குருமூர்த்தி (என்கிற) காட்டு ராஜா, 8. அரவிந்த், 9.மணிகண்டன் (என்கிற) டிராகன் மணிகண்டன் 10.விக்னேஷ் என மொத்தம் 10 எதிரிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இவ்வழக்கின் குற்றவாளியான எதிரி அரவிந்த் என்பவர் மீது பல்வேறு காவல்நிலையங்களில் ஆறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. எனவே, மேற்படி எதிரி அரவிந்த் என்பவர் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர் என விசாரணையில் தெரிய வருவதாலும், அவரது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டும் காந்திமார்க்கெட் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையின் பேரில் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் எதிரி அரவிந்த் என்பவருக்கு குண்டர் தடுப்பு சட்டத்தின்படி ஆணை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது 
சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/Trichyvision