நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 398 வார்டுகளுக்கு 1926 வேட்பாளர் போட்டி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 398 வார்டுகளுக்கு 1926 வேட்பாளர் போட்டி

நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் 401 வார்டுகளுக்கு நடைபெற இருந்தது. 1 மாநகராட்சி, 5 நகராட்சிகள், 14 பேரூராட்சிகள் இதில் அடங்கும். வேட்புமனுக்கள் தாக்கல் செய்து பரிசீலனை முடிந்து வாபஸ் பெற்று இறுதி வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியானது.

திருச்சி மாநகராட்சியில் 718 பேர் வேட்பாளர்களாக வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அதில் 15 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 114 பேர் வாபஸ் பெற்றனர். தற்பொழுது 589 பேர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.

5 நகராட்சியை பொறுத்த அளவு 120 வார்டுகளுக்கு 676 பேர் வேட்பு மனு தாக்கல். 12 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 119 பேர் வாபஸ் பெற்றனர். 544 பேர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
ஒருவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

14 பேரூராட்சியில்  216 வார்டுகளில் 890 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்து இருந்தனர். 120 வார்டுகளில் 2 பேர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். ஐந்து பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 793 பேர் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

திருச்சி மாவட்டம் தாத்தையங்கார்பேட்டை பேரூராட்சி 15 வார்டில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளரும், துறையூர் நகராட்சியில் 24 வார்டில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளரும், தொட்டியம் பேரூராட்சியில. 13வது வார்டில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளரும் போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சியில் 65 வார்டுகள், 5 நகராட்சியில் 119 வார்டுகள், பேரூராட்சியில் 214 வார்டுகளும் ஆக மொத்தம் 398 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn