மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் சூசகம்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில், பருவ கால பேரிடர் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, காய்ச்சல் முகாம்கள் மற்றும் பொது சுகாதாரப் பணிகள் குறித்த மாநில அளவிலான ஆய்வு கூட்டம் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசுகையில்..... 385 ஒன்றியத்தில் உள்ள வட்டார மருத்துவ அலுவலர்களை ஒரே இடத்தில் வரவழைத்து மாநில அளவில் நடத்தும் முதல் கூட்டம் இது. பொது சுகாதார துறையை பொறுத்த வரை அந்த அந்த மாவட்டம், மண்டல அளவில் நடத்துவோம் ஆனால் தமிழகத்தில் இருந்து அனைத்து பி.டி.ஓக்களை அழைத்து நடத்தும் முதல் கூட்டம். 96 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளோம்.
92 சதவீதம் இரண்டாவது தவனை தடுப்பூசி செலுத்தி உள்ளோம். 96சதவீதம் மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியோடு உள்ளனர். அதனால் 6 மாதத்தில் கொரோனோ இறப்பு இல்லை. ஹெச்1 என்1 வைரஸ் பாதிப்பு 381 பேர் பாதிப்பு என இருந்த நிலையில், தற்போது வெறும் 10ஆக உள்ளது. தமிழகத்தில் கடந்த 10 மாதத்தில் வெறும் 2 பேர் தான் டெங்குவால் இறந்துள்ளனர். டெங்கு கட்டுக்குள் உள்ளது.
உலகத்திற்கே வழிகாட்டியாக மக்களை தேடி மருத்துவம் திட்டம் உள்ளது. World economic forum ஸ்விட்சர்லாந்தில் நடைபெற உள்ளது. அங்கு நான் கலந்து கொண்டு மக்களை தேடி மருத்துவம் திட்டம் குறித்து பேச உள்ளேன். மத்திய சுகாதார துறை அமைச்சரே நம்மை இது குறித்து தொடர்ந்து பாராட்டி வருகிறார் என தெரிவித்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO