நீங்கள் என்ன குற்றம் செய்தாலும் அதை நாங்கள் பொறுத்துக் கொள்வோம் - அமைச்சர் கே.என்.நேரு பேச்சு
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில், பருவ கால பேரிடர் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, காய்ச்சல் முகாம்கள் மற்றும் பொது சுகாதாரப் பணிகள் குறித்த மாநில அளவிலான ஆய்வு கூட்டம் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில்.... கிராமப்புறங்களில் பணியாற்றும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்தால் அவர்கள் இன்னும் சிறப்பாக பணியாற்றுவார்கள். இது என்னுடைய கருத்து.
மருத்துவ துறை அதிகாரிகளே, அரசாங்கமே நீங்கள் தான். நாங்கள் அடுத்த ஐந்து ஆண்டில் தேர்தெடுக்கப்பட்டு வந்தால் தான் போச்சு, ஆனால் நீங்கள் நிரந்தரமாக பணியில் இருப்பீர்கள். அதனால் நாங்கள் எதுவும் வேகமாக பேசினாலும் கொஞ்சம் பொறுத்து கொள்ளுங்கள், அனுசரித்து கொள்ளுங்கள். கருணாநிதி இருந்த போது 49.99 கோடி திருச்சிக்கு 20 ஆண்டுக்கு முன்னர் மருத்துவமனை கட்டிடத்திற்கு ஒதுக்கினார்.
திருச்சியில் பல் மருத்துவ கல்லூரி மற்றும் சித்த மருத்துவ கல்லூரி வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். கொரோனோவில்... கூட பிறந்த அண்ணன் தம்பி எல்லாம் ஒடி விட்டார்கள். ஆனால் உங்கள் உயிரை பற்றிய கவலை கொள்ளாமல் காப்பாற்றினீர்கள். நீங்கள் என்ன குற்றம் செய்தாலும் அதை நாங்கள் பொறுத்துக் கொள்வோம் என தெரிவித்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO