கிராமங்களில் அதிவேக இணையதள வசதி - ஆட்சியர் தகவல்

கிராமங்களில் அதிவேக இணையதள வசதி - ஆட்சியர் தகவல்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள அனைத்து (404) கிராம ஊராட்சிகளிலும், இணையதள வசதி வழங்கும் பாரத் நெட் திட்டமானது. தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET) மூலம் தற்போது முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது இணையதள இணைப்பு வழங்கும் பணியானது, வருகிற செப்டம்பர் மாதம் முதல் துவங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கண்ணாடி இழை இணைப்பானது; 85% மின்கம்பங்கள் மூலமாகவும், 15% தரை வழியாகவும் இணைத்திட. நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கான Rack / UPS உள்ளிட்ட உபகரணங்கள், ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ள கிராம ஊராட்சி சேவை மையம் (VPSC) அல்லது அரசு கட்டிடத்தில் நிறுவப்பட்டு வருகிறது. இந்த உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ள அறையானது, சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவரால் நூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்திற்கான உபகரணங்களை பாதுகாத்திடவும் தடையில்லா மின் வசதி உள்ளதை உறுதி செய்திடவும், POP பொறுத்தப்பட்டுள்ளன அறையில் வேறு தேவிையற்ற பொருட்கள் வைக்கப்படாமல் இருப்பதை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு, சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி செயலாளர் அரசாணையின்படி பொறுப்பாக்கப்பட்டு உள்ளார்.

இதனால் இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் போது, ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் வசிக்கும் மக்கள் அனைவரும் இணையதள வசதிகளை பெற முடியம். ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் POP மையங்களில் பொருத்தப்பட்டுள்ள மின்கலம், UPS, Rovuter, Rack மற்றும் கண்ணாடி இழை உள்ளிட்ட உபகரணங்கள் யாவும் அரசின் உடைமைகளாகும். மேற்கண்ட உபகரணங்களை சேதப்படுத்தும் அல்லது

திருடும் நபர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் காவல் துறையின்) மூலம் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார்.தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision