தலித்துகளை அரவணைக்க வேண்டிய பொறுப்பு இடது சாரிகளிடம் உள்ளது திருச்சியில் தொல்.திருமாவளவன் பேச்சு

தலித்துகளை அரவணைக்க வேண்டிய பொறுப்பு இடது சாரிகளிடம் உள்ளது திருச்சியில் தொல்.திருமாவளவன் பேச்சு

திருச்சி வாசிப்போர் களம் என்ற அமைப்பின் சார்பில் ஆணவப் படுகொலைகளும் - இந்துத்துவ கோட்பாடும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதற்கு களம் அமைப்பாளர் செ.காமராஜ் தலைமை வகித்தார். வழக்கறிஞர்கள் ஆர்.கார்த்திக், எஸ்.அருண், எம்.செல்வகுமார், எல்.பி.மெளனிஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கருத்தரங்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், மக்களவையின் சிதம்பரம் தொகுதி உறுப்பினருமான தொல்.திருமாவளவன் கலந்துக்கொண்டு கருத்துரை வழங்கினார்.

இந்த கருத்தரங்கில் தொல்.திருமாவளவன் பேசுகையில்..... அம்பேத்கர் சொன்னார் நமக்கு இரண்டு எதிரிகள் ஒன்று பார்ப்பனியம் மற்றொன்று முதலாளித்துவம். இந்த இரண்டையும் எதிர்த்து போராட வேண்டும். இதுதான் அம்பேத்கரின் இயக்கத்துடைய  அடிப்படை முதலாளித்துவ எதிர்ப்பு என்பதிலே ஏகாதிபத்தியம்  அடங்குகிறது. பன்னாட்டு முதலாளிகள் ஆக பரிமாணத்துவம் அடைந்துள்ளது. ஒரே ஒரு ஆள நினைப்பது பன்மை தத்துவத்துக்கு எதிரானது. ஒரு கட்சி என்றால் எல்லோருக்கும் அதிகாரம் இருக்க வேண்டும் ஒருவரிடம் இருப்பதுதான் ஏகாதிபத்தியம்.  டெல்லியில் மட்டும் அதிகாரம் குவிந்து இருக்கக்கூடாது, மாநிலம் முழுவதும் அதிகாரம் இருக்க வேண்டும்.

இடதுசாரி சக்திகள் பிஜேபி அளிக்க வேண்டும் என்று நினைத்தால்  இடதுசாரி சக்திகள் வளர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் நினைக்கிறது. இன்று இடம் சரியில்லை என்றால் உனக்கும் எனக்கும் ஆதரவாக இன்று யார் களத்தில் நிற்பார்கள். இடதுசாரி சிந்தனை இல்லை என்றால் எப்படி ப.பா மோகன் கோகுல்ராஜ் வழக்கில் போய் வாதாடி இருப்பார். நாமோ அல்லது அவரது குடும்பத்தினரோ ஏதாவது அவர்களுக்கு கொடுத்தார்களா.

அப்படி அவர் போய் நிற்கிறார் என்றால் அவரை மோல்ட் செய்தது இடதுசாரி சிந்தனை மார்க்சிய சிந்தனை அப்படி என்றால் நட்பு சக்தி எது இடதுசாரி சக்திகள் தான். இவர்கள் தான் ஜனநாயக சக்திகள். இது இந்திய அளவிலே கட்டமைக்க வேண்டும். அகில இந்திய அளவில் தலித் இயக்க தலைவர்கள் எல்லாம் காங்கிரஸிலிருந்து பிஜேபிக்கு போகிறார்கள் என்றால் இது அவர்களின் குறையாக பார்க்கக்கூடாது. தேசிய அளவில் உள்ள இடதுசாரிகள்  தலித் இயக்கங்களை அங்கீகரிக்க வேண்டும் அரவணைக்க வேண்டும்.

அவர்களை அரசியல் படித்து இருந்தால் ஆபத்தை உணர்ந்து இருப்பார்கள். பிஜேபியுடன் கை கோர்ப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை அவரால் உணர முடியவில்லை. பிஜேபி வளர்வது எவ்வளவு ஆபத்தானது என்பதை புரியாமல் அவர்கள் கைகோர்க்கிறார். பிஜேபி மீண்டும் ஆட்சிக்கு வருவது எவ்வளவு தீங்கு என்பதை அவர்களுக்கு யார் உணர்த்துவது.  அவன் மதத்தையும், ஜாதியை மட்டுமே சொல்லிக் கொடுக்கிறான்.

நாம் தலித் இயக்கங்களை ஜாதி சாந்தமாக கருதி அது பிற்போக்கான அரசியல் எனக்கருதி அவர்களிடமிருந்து நாம் அன்னியப்பட்டு நின்றாள். அவர்களின் நாம் அன்னியப்படுத்துவது போல ஆகிவிடுகிறது. எனவே தலித் இயக்கங்களுக்கு முன் கை கொடுத்து அரவணைப்பது இடதுசாரி இயக்கங்களுக்கு பொறுப்பு என்பதை விடுதலை சிறுத்தைகள் சுட்டிக்காட்டுகிறது.

இடதுசாரி இடம் கொடுத்தால் பிஜேபி பக்கம் போக மாட்டான், வேறு பிற்போக்கான இயக்கங்களோடு, சாதி சங்கங்களை கைகோர்க்க வேண்டிய தேவை வராது அவர்களே அரசியல் படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO