மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டவர் கைது

மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டவர் கைது

திருச்சி மாநகரம், கே.கே.நகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் செந்தில்குமார் என்பவர் தனது நண்பர் சிவக்குமார் என்பவரின் சகோதரர் மாமுண்டி என்பவருடைய மகன் நாகமுனி என்பவருக்கு மின்சார வாரியத்துறையில் AE வேலை வாங்கி 
தருவதாக புத்தூரைச் சேர்ந்த கல்லணை குணா (எ) நாகராஜன் கூறியதையடுத்து, அவரது வீட்டில் சந்தித்து ரூ.5,00,000/-த்திற்கு காசோலை ஒரு முறையும், ரூ.7,00,000/-த்தை ஒரு முறை பணமாகவும் ஆக மொத்தம் ரூ.12,00,000/- (12 லட்சம்) பணம் கொடுத்துள்ளதாகவும், தற்போது 
வரை மின்சார வாரியத்தில் வேலை தாங்கி தராமல் ஏமாற்றி நம்பிக்கை மோசடி செய்ததாக வாதி செந்தில்குமார் என்பவர் புகார் அளித்தார்.

அதன்பேரில் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திக்கேயன் உத்தரவுப்படி, திருச்சி மாநகர குற்றப்பிரிவு குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கின் எதிரியான கல்லணை குணா (எ) நாகராஜன் (45) என்பவரை 04.11.2021 அன்று கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விசாரணையில் மேற்படி எதிரியான கல்லணை குணா (எ) நாகராஜன் என்பவர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்தது. மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற மோசடி செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், பொதுமக்களிடம் வேலை வாங்கி தருவதாக யாரேனும் தெரிவித்தால் ஏமாற வேண்டாம் என்றும், அவர்களை பற்றிய 
தகவல்களை உடனடியாக திருச்சி மாநகர காவல்துறைக்கு தெரிவிக்கும்படி திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/Trichyvision